உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னப்பட்டணா சீட் வேண்டும் தேஜஸ்வினி கவுடா பகிரங்க கடிதம்

சென்னப்பட்டணா சீட் வேண்டும் தேஜஸ்வினி கவுடா பகிரங்க கடிதம்

பெங்களூரு: 'சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், எனக்கு சீட் தாருங்கள்' என, முன்னாள் எம்.பி., தேஜஸ்வினி கவுடா, முதல்வர் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருப்பதால், சென்னப்பட்டணா தொகுதி சீட்டுக்கு நான், நீ என பலர் போட்டி போடுகின்றனர். முன்னாள் எம்.பி., சுரேஷ், குஸ்மா ஹனுமந்தப்பா உட்பட பலரின் பெயர் கூறப்பட்டது. சிவகுமாரே களமிறங்குவார் என, தகவல் வெளியானது.முன்னாள் எம்.பி., தேஜஸ்வினி கவுடாவும், சீட்டுக்கு துண்டு போடுகிறார். நேற்று முன்தினம் இவர், முதல்வரின் காவேரி இல்லத்துக்கு சென்றிருந்தார். அங்கிருந்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்., தேசிய முதன்மை செயலர் வேணுகோபால் ஆகியோரிடம், சென்னப்பட்டணாவில் தனக்கு சீட் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். இவர் பா.ஜ.,வில் இருந்து, காங்கிரசுக்கு வந்தவர்.இதற்கிடையே நேற்று முதல்வருக்கு தேஜஸ்வினி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:நான் தொகுதி தலைவியாக இருக்கிறேன். 2004ல் தேவகவுடாவையே தோற்கடித்தவள். தொகுதி மக்களின் நாடித்துடிப்பு எனக்கு தெரியும். மக்களுக்கு நன்கு அறிமுகம் உள்ளவள். எனக்கு சீட் கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.சமுதாயத்தினர் ஆதரவும் எனக்கு உள்ளது. இடைத்தேர்தலுக்கு என் பெயரை முடிவு செய்யுங்கள். கட்சி யாருக்கு சீட் கொடுத்தாலும், அவர்களுக்காக நான் பணியாற்றுவேன். கட்சி விரும்பினால் போட்டியிட தயாராக இருக்கிறேன்.தொகுதி மக்களுடன் எனக்கு, 20 ஆண்டுகள் தொடர்பு உள்ளது. மக்கள் மதிக்கும் பத்திரிகையாளர், வக்கீல். பிஹெச்.டி., பட்டம் பெற்றவள். இடைத்தேர்தலில் போட்டியிட, என்னை ஆசிர்வதியுங்கள். ஏழை மக்களுக்கு சேவை செய்ய, வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

krishnamurthy
அக் 18, 2024 16:52

கட்சி மாறுவது பெரும் தகுதியா


Chola
அக் 18, 2024 16:30

"ஏழை மக்களுக்கு சேவை செய்ய, வாய்ப்பு தாருங்கள்." யப்பா சாமி முடியல


சமீபத்திய செய்தி