உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெய்ப்பூரில் கோவில் சூறையாடல் போராட்டம் நடத்தியவர்கள் கைது

ஜெய்ப்பூரில் கோவில் சூறையாடல் போராட்டம் நடத்தியவர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் ஜெய்ப்பூரில் தேஜாஜி கோவில் உள்ளது. வழிபாட்டிற்காக வழக்கம்போல் நேற்று காலை கோவிலை திறந்தபோது, உள்ளே இருந்த கடவுள் சிலைகள் சேதமடைந்து இருப்பதை பார்த்து, கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தி, அவர்கள் முழக்கமிட்டனர்.இதைத்தொடர்ந்து, சிலர் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். அதன்பின், போக்குவரத்து சீரானது. கோவில் சூறையாடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajathi Rajan
மார் 30, 2025 12:37

என்ன நடந்தது என தெரியாம, யார் செய்தது என ஹெரியம கருத்து என்னும் பெயரில் முஸ்லிம்கள் மீது வன்மத்தை கக்கும் சங்கிகள், திருட்டு ஹிந்து சங்கிலிகள்,


Tetra
மார் 31, 2025 10:20

வன்முறையின் வடிவத்திற்கு முட்டுக் கொடுத்தும் பாகிஸ்தானி


Kumar Kumzi
ஏப் 08, 2025 08:30

பார்ர்ரா இந்து பெயரில் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா பொங்குறான் ஹாஹாஹா


Kumar Kumzi
மார் 30, 2025 12:13

இந்த மாதிரியான கேடுகெட்ட வேலைகளை மூர்க்க காட்டுமிராண்டிகள் தான் செய்வானுங்க


Kasimani Baskaran
மார் 30, 2025 07:12

கேடிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.


Karthik
மார் 30, 2025 21:08

தென், சேம் டே ஜாமீன் கிராண்ட்டேட்... தென், மார்கம் ஃப்ரீலி கேன் கோ வித் ஹாப்பி.. இந்நிலையில் , கொடவுன்ல இருக்குற பருத்தி மூட்டை தோட்டத்துக்கு போயி என்ன பிரயோஜனம்..??


PARTHASARATHI J S
மார் 30, 2025 05:31

இந்தியாவிலே வித்தியாசமான மாநிலம் ராஜஸ்தானம். மரங்களை தெய்வமாக வழிபடுபவர்கள் ஏராளம். இங்கேயும் முஸ்லீம் கருப்பாடு புகுந்து கலாட்டா செய்காறது. ராஜஸ்தான் அமைதியாக இருப்பது பாகிஸ்தான் ஆதரவாளர்கட்கு ஏனோ பிடிக்கவில்லை. அந்த களவாளிகட்கு என்னதான் வேண்டுமாம் ?


Mohan
மார் 30, 2025 07:49

அவர்கள் தெளிவாக உள்ளார்கள் நம்மை கேட்க இவ்வுலகில் யாரும் இல்லை. நாம் நினைத்தது நடக்க எல்லா இடத்திலும் அவர்களுடைய ஆட்கள், நடுநிலை ஜந்துக்கள், மதசார்பின்மை என்ற போர்வையில் அரசியல்வ்யாதிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை