வஜிராபாதில் துார்வார ரூ.25 கோடிக்கு டெண்டர்
புதுடில்லி,:வஜிராபாதில் நீர் சேமிப்பை அதிகரிக்க, துார்வாரும் பணிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.நீர்வளத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, வடக்கு டில்லியில் உள்ள வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, வஜிராபாத் தடுப்பணையில் நீர் சேமிப்பை அதிகரிக்க, துார்வாரப்படும் என கூறினார்.இந்நிலையில், டில்லி ஜல் போர்டு ஒரு டெண்டர் வெளியிட்டுள்ளது. வஜிராபாத் தடுப்பணையில் 25 கோடி ரூபாய் செலவில், 3.63 லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை அப்புறப்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, ஜல் போர்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:குளத்தில் வண்டல் மண் அகற்றப்பட்ட பின், நீர் சேமிப்புத் திறன் 45 கோடி லிட்டர் அதிகரிக்கும். யமுனை நதியில் முதல் தடுப்பணையாக வஜிராபாத் அமைந்துள்ளது. இங்கு மிகப்பெரிய நீர் வழங்கும் தொட்டியை டில்லி ஜல் போர்டு கட்டியுள்ளது. வஜிராபாத் முதல் ராம்காட் வரை துார்வாரும் பணி மேற்கொள்ளப்படும். துார்வாரும் பணியை இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின், வஜிராபாத் தடுப்பணையில் தற்போதைய கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீரை சேமிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.