உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: மத்திய தேசிய புலனாய்வு படையினரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். குல்கம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக நடந்த இந்த தேடுதிலில் நள்ளிரவில் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர். இறந்தவர்கள் பல வழக்குகளில் தொடர்புடைய பசீத்அகம்மதுதார்(லஷ்கர் கமாண்டர்) , முமிம்மிர், பஹிம்அகம்மதுபாபா என தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 09, 2024 12:42

சிறப்பான செயல் கொண்டாடவேண்டும் இருந்தாலும் போதாது கூண்டோடு காலிசெய்யப்படவேண்டும் அவர்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி