உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

மும்பை: மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து நகரில் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. தொடர்ந்து துர்கா பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் மற்றும் சட்டசபை தேர்தல் வர உள்ளன. இவற்றை சீர்க்குலைக்கும் வகையில் பயங்கர வாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இடங்களில் போலீசார் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, துணை போலீஸ் கமிஷனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி கூடுதல் போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கோவில்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து தெரியவந்தால் போலீசுக்கு தெரிவிக்கவும் கோவில் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை