உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 ஆண்டுக்கு பின் ஒன்றாக இணையும் தாக்கரே சகோதரர்கள் : இன்று இந்தி எதிர்ப்பு பேரணி

20 ஆண்டுக்கு பின் ஒன்றாக இணையும் தாக்கரே சகோதரர்கள் : இன்று இந்தி எதிர்ப்பு பேரணி

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து மும்மொழி கொள்கைக்கு எதிராக இன்று இந்தி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கின்றனர்.சிவசேனா கட்சியை தோற்றுவித்த பால் தாக்கரே இவரது மகன் உத்தவ் தாக்கரே. இந்தகட்சியில் செல்வாக்குமிக்க தலைவராக இருந்தவர் ராஜ்தாக்ரே, இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார்.கடந்த 2005ம் ஆண்டு கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்ரே கட்சியை விட்டு வெளியேறி மகாராஷ்டிரா நவநிரமாண் சேனா என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கி நடத்தி வருகிறார். இரு தரப்பினர் இடையே 20 ஆண்டுகளாக விரோதம் நீடித்து வந்தது. எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தனர்.இந்த சூழலில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பா.ஜ., மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ், ராஜ் தாக்கரே இருவரும் இன்று இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்துகின்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கின்றனர். இவர்கள் ஒன்றிணைவதற்கு தேசிய வாத காங்., தலைவர் சரத்பவார் ஆதரவு தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மராத்தி மொழிக்காக இருபது ஆண்டு பகையை மறந்து ஒன்றிணைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Shekar
ஜூலை 05, 2025 12:23

பால் தாக்கரே காலத்தில், சிவசேனா என்பது பொதுமக்களுடன் அவர்கள் பிரச்சனையை சார்ந்திருந்தது. உதாரணத்திற்கு மீட்டர் இல்லாமல் ஆட்டோ, டாக்ஸி பேரம் பேசினால் அதை கண்டிப்பது, குடியிருப்பு சாலையோரம் பலான பெண்கள் திரிந்தால் கண்டித்து விரட்டுவது. ரவ்டித்தனம் செய்பவர்களை விரட்டுவது போன்ற அடித்தட்டு மக்களை சார்ந்திருந்தது, மக்கள் ஆதரவும் இருந்தது. இன்று மக்களைவிட்டு விட்டு விலகி அரசியல் செய்வதால் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்


Vaduvooraan
ஜூலை 05, 2025 12:17

டூ லிட்டில்..டூ லேட் தேவையில்லாமல் ஒரு மாநிலக் கட்சி பாஜக மாதிரி ஒரு தேசீய கட்சிக்கு குடைச்சல் கொடுத்தால் முடிவு இப்படித்தான் இருக்கும்சிவ சேனை is a pale shadow of what இட் was


Thravisham
ஜூலை 05, 2025 12:15

ரெண்டுமே எலியும் பூனை மாதிரி. ரொம்ப நாள் ஒன்னாருக்கா மாட்டாங்க


V RAMASWAMY
ஜூலை 05, 2025 11:44

மொழி அரசியல் ஆபத்து. தாய்மொழி கட்டாயம், அதைத் தவிர்த்து விருப்பம், தேவைக்கேற்ப எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள உரிமையும் வசதியும் மாணவர்களுக்கு அவசியம்.


என்னத்த சொல்ல
ஜூலை 05, 2025 10:56

ஏற்கனவே ஹிந்திதான் மராட்டியத்தில் பரவலா பேசப்படுகிறது வேண்ணா ஒன்னு செய்யலாம். அங்கு மராட்டியத்தை கட்டாய பாடமாக்க வேண்டும்.


Shekar
ஜூலை 05, 2025 12:11

மும்பையை நினைத்து சொல்லவேண்டாம், புனே யில் கூட ஹிந்தி அதிகம் கிடையாது. மகாராஷ்டிரா உட்புறங்களில் சுத்தமாக கிடையாது.


Keshavan.J
ஜூலை 05, 2025 10:20

இவர்கள் இரண்டு பேரும் தமிழகம் வந்து ஹிந்தியோ அல்லது இங்கிலீஷுபேசினால் கொடுக்கணும்.


venugopal s
ஜூலை 05, 2025 10:07

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மஹாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் அவர்களின் ஒற்றுமையின்மை என்பதை புரிந்து கொண்டால் நல்லது. எடுபிடி கட்சியாக இருந்த பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் அழிந்த மற்றொரு கட்சி!


Mettai* Tamil
ஜூலை 05, 2025 12:08

மொழியை வைத்து தேச பிரிவினைவாதம் செய்யும் சிவசேனா கட்சி அழிவது நாட்டிற்கு நல்லது தான் ...


M S RAGHUNATHAN
ஜூலை 05, 2025 10:01

இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன. மராட்டியர்கள் புத்திசாலிகள். இவர்களை நன்றாக கவனிப்பார்கள். பாலாசாஹெப் ஒரு புலி. ஒரு முறை ஒரு இசுலாமிய அமைப்பு அமர்நாத் யாத்ரா நல்லபடியாக நடத்த விடமாட்டோம் என்று அறைகூவல் விடுத்தது. காங்கிரஸ் அரசு வாளாவிருந்தது. பாலாசாஹெப் ஒரு அறிக்கை விட்டார். அமர்நாத் யாத்திரைக்கு ஏதாவது இடையூறு வந்தால் இந்தியாவில் இருந்து ஒரு விமானம் கூட ஹஜ் யாத்திரை செல்லாது என்றார். இசுலாமிய அமைப்பு வாய் மூடிக் கொண்டது. ஆனால் இவர்கள் பூனைகள். மியாவ் சத்தத்துடன் சரி.


Krishnamoorthy
ஜூலை 05, 2025 09:48

அவன் அவன் மொழிக்காக உயிரை கொடுக்கணும்.


Mettai* Tamil
ஜூலை 05, 2025 12:09

அவன் அவன் நாட்டுக்காக உயிரை கொடுக்கணும்...


KRISHNAN R
ஜூலை 05, 2025 08:02

தப்பு செய்ய உள்ளனர்


சமீபத்திய செய்தி