தங்கவயல் செக் போஸ்ட்
சட்டம் ஒரு இருட்டறைகோலாரு அசெம்பிளிக்காரரு தன்னோட சுய லாபத்துக்காக போலி ஜாதி சான்றிதழ் உருவாக்கி, பட்டியல் ஜாதிக்கு, அரசு தரும் சலுகைகளை விழுங்கிய வழக்கு டாப் கோர்ட்டு வரை போனது. அவருக்கு தோல்வி தான் கிடைச்சது.ஆனாலும் எந்த ஒரு தண்டனையும் அவருக்கு கிடைக்கலையே. சட்டம் ஒரு இருட்டறைன்னு சும்மாவா சொன்னாங்க. நாடறிந்த குற்றங்களை செய்தவங்கள சட்டம் வேடிக்கை பார்க்கலாமா. பட்டியல் ஜாதிக்குரிய இட ஒதுக்கீட்டில் அசெம்பிளிக்கு தேர்வாகி, அதற்குரிய எல்லா சலுகையுமே தின்று ஏப்பமிட்டவரை கை ஆட்சி எப்படி தான் தலையில் துாக்கி வச்சி தாங்குதோ. குற்றம் புரிந்தவங்க வாழ்க்கையில் நிம்மதியா தானே இருக்காங்க.தீர்மானிப்பது யார்?மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட ஆர்.டி.ஓ., ஆபீசை கோல்டு நகரில் ஏற்படுத்தி இருக்காங்க. இதனை மாலுாரில் ஏற்படுத்த அங்குள்ள கைக்காரர் முயற்சித்தாரு; ஆனால் கை நழுவி போனது. கோல்டு சிட்டியில் அமைய ப.பேட்டைக்காரர் தகராறு இல்லாமல் 'ஓகே' சொல்லிட்டாரு. ஆனாலும், மாலுார்காரரு சி.எம்., மற்றும் மாவட்ட மந்திரி ஆளு என்பதால், அதன் திறப்பு விழா மாலுாரார் சொல்வது போல தான், நாள் நிச்சயிக்கப்படும் என சவுண்ட் கொடுக்கிறாங்க.போக்குவரத்து மந்திரியும் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், மூன்று அசெம்பிளிக்காரர்களின் ஒருமித்த கருத்துடனும், மாவட்ட பொறுப்புக்காரர் விருப்பப்படியும் தான் திறப்பு விழா நடக்க இருக்குதாம். இதன் பங்கு பரிவர்த்தனை மூன்று பேருக்கு பிரிக்கலயாமே.இன்னும் எத்தனை வழக்குகள்? ரெண்டு மாவட்டத்துக்கென இருந்து வரும் ஒரே கூட்டுறவு வங்கியில் டைரக்டர்கள் பதவிக்காலம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கூட, அடுத்த தேர்தல் இன்னும் நடத்தல. அசெம்பிளி தேர்தலின் போது, கை கட்சியின் சீனிவாசப்பூர் சட்ட நிபுணரை தோற்கடிக்க இந்த கூட்டுறவு வங்கியின் 'தல' பல கோடியை பயன்படுத்தின கோபம் சட்ட நிபுணருக்கு அடங்கல.அதனால் தான் வங்கியில் மீண்டும் அவரை தலை துாக்க விடாமல், ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவங்களை ஏவி விட்டு ஆட்டம் காட்டுறாரு.இந்த கூட்டுறவு வங்கியின் பல கிளைகளில் நடந்த பல நுாறு கோடிக்கும் அதிகமான மோசடிகளை கண்டு பிடித்து, இதுவரை ஏழு எப்.ஐ.ஆர்., போட வெச்சிட்டாங்க.இன்னும் பல வழக்குகளில் சிக்க வைக்க மேலும் துருவி வர்றாங்க. எப்படியும் கம்பி எண்ண கூண்டு தயாரா இருப்பதா சொல்றாங்க. இன்னும் எத்தனை வழக்குகள் பதியுமோ.