மேலும் செய்திகள்
ரிப்போர்ட்டர் லீக்ஸ்
07-Oct-2024
ரிப்போர்ட்டர் லீக்ஸ்
21-Oct-2024
ஆளே இல்லாத இடத்தில்...?பாரத் மண்வாரி எந்திர தொழிற்சாலையின் தற்காலிக ஊழியர்கள், ஆலையின் நுழைவு வாயிலில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால், போராட்டம் நடத்த நிபந்தனை அனுமதி கொடுத்தாங்க. ஆனால், போராட வேண்டியவங்களோ, 2000 மீட்டருக்கு அப்பால் போராடுவதாக அறிவித்திருக்காங்க. அதாவது, ஆளே இல்லாத இடத்தில், டீ ஆத்தப் போறாங்களாம். சத்தமே வராதபடி, மவுனம் கடைபிடிக்க போறாங்களாம்.வம்பு, வழக்கு எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக, பப்ளிக் நடமாட்டம் குறைந்த இடத்தில, போராட முடிவெடுத்துள்ளாங்க. இந்த போராட்டத்தால் என்ன பயன் கிடைக்கப்போகுதோன்னு சில ஊழியர்கள் அங்கலாய்க்கிறாங்க.யாருக்கு என்ன கோபமோ?கோல்டு சிட்டியின் வக்கீலுக்கு மாநில அரசு 69 ம் ஆண்டின் 'உதய தின விருது' வழங்கினாங்க. இது கோல்டு சிட்டிக்காரர்களுக்கு கவுரவம். இது பத்தி சொல்லியா தெரியணும். தாலுகா அளவில நடந்த விழாவுல, அவரை பாராட்டி இருக்க வேண்டாமா? ஆனா, அந்த விழாவுல அதை பற்றி யாருமே கண்டுக்கவே இல்லை. இப்படி எல்லாம் செய்யலாமா? தனக்கு பாராட்டு விழா நடத்துங்கன்னு வக்கீலா வந்து சொல்ல முடியுமா? உள்ளூர்காரர் என்றால் என்ன மாதிரி மதிப்பு கொடுத்திருக்கணும்.கவுன்சில் கூட்டம் எப்போது?ஒன்றரை வருஷமா ஒரு முறை கூட கவுன்சில் கூட்டம் கூடல. இடைத்தேர்தலில் ஜெயித்த பெண் கவுன்சிலர் இதுவரைக்கும் கூட்டத்த பார்த்ததில்ல. இவர் மட்டுமில்ல... நியமன உறுப்பினர்களும் பேருக்கு சர்ட்டிபிகேட் வாங்கி வீட்டில் தொங்க விட்டுக்க வேண்டியது தான். இது பற்றி யார் கேட்க வேண்டும். 35 வார்டிலும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவங்க எதுக்கு, யாருக்கு அச்சப்படுறாங்களோ. இப்படி ஒரு 'கவுன்சில்' கோல்டு சிட்டியில் இருந்ததே இல்லை. எல்லாமே ஆபிசர்கள் கட்டுப் பாட்டில் இருக்குதுன்னு சொல்றாங்க. மக்கள் பிரதிநிதிகளுக்கு பெருசா வேலை எதுவுமே இருப்பதாக தெரியல. பேருக்கு தான் ஜனநாயக உள்ளாட்சி.முடியாத இணைப்பு மா.குப்பம் -- குப்பம் ரயில்வே இணைப்பு திட்டம் முடிவடைந்து போக்குவரத்து துவங்க இன்னும் எத்தனை வருஷம் தான் காத்திருக்கணுமோ?சென்னை -- பெங்களூரு எக்ஸ்பிரஸ் காரிடார் திட்டம் கூட, மூன்றே வருஷத்துல முடிவடைந்து, கோல்டு சிட்டி - பெங்களூருக்கு போக்குவரத்தும் தொடங்கியாச்சு. ஆனால் 30 வருஷமா ரயில்வே இணைப்பு திட்டம் முடிந்த பாடில்லை. இந்த வருஷ இறுதிக்குள்ளாவது முடியுமான்னு தெரியலையே. இன்னும் எத்தனை கோடி தேவைப்படுமோ?
07-Oct-2024
21-Oct-2024