உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ.,யை முழுசா நம்பினால் அவ்வளவுதான்: எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்!

ஏ.ஐ.,யை முழுசா நம்பினால் அவ்வளவுதான்: எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகியவை நிதிச்சேவை நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரே அடியாக அவற்றை சார்ந்து இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது' என இன்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.அவர் மேலும் கூறுகையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பயன்பாடு, இணையத் தாக்குதல் மற்றும் வங்கி தகவல் களவு போகும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக, தொழில்நுட்ப சந்தையில், குறைந்த எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம்.எனவே வங்கிகளும், நிதிச் சேவை நிறுவனங்களும் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

காளிராஜன்
அக் 15, 2024 03:52

ஆனாலும் ரிசர்வ் வங்கி முதல் எல்லா வங்கிகளும் ஏ.ஐ தொழில் நுட்டபத்தை செயல்படுத்தி இருக்கிற வேலைகளையும்.காலி பண்ணும். இப்பவே கஸ்டமர் சப்போர்ட்டுக்கு மியூசிக் போட்டு காக்க வெக்கிறாங்க.


அப்பாவி
அக் 14, 2024 22:09

ஏ.ஐ தொழில்நுட்பம் வந்தால் இவர் செய்யுற வேலைய கம்பியூட்டரே செஞ்சுரும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 14, 2024 20:21

எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மையை இவரும் கண்டு புடிச்சு சொல்லிட்டாரு ...... ஒரு பாரத ரத்னா பார்சல் .....


Narayanan Sa
அக் 14, 2024 19:51

இவர் சொல்வது முற்றிலும் உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை