உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளா நடக்கும் பகுதி தனி மாவட்டமாக அறிவிப்பு

கும்பமேளா நடக்கும் பகுதி தனி மாவட்டமாக அறிவிப்பு

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா நடக்கும் பகுதியை தனி மாவட்டமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியில், பக்தர்கள் புனித நீராடும் மஹா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.அந்த அரிய நிகழ்வு, 2025 ஜன., 13ல் துவங்கி பிப்., 26ல் முடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. ஆயத்தப் பணிகளை பார்வையிட, பிரதமர் மோடி வரும் 13ல் பிரயாக்ராஜ் வருகிறார்.இந்நிலையில், மஹா கும்பமேளாவுக்கான நிர்வாகப் பணிகளை நெறிப்படுத்தவும், விழாவை பிரமாண்டமாகவும், சுமுகமாகவும் நடத்தும் நோக்கில், கும்பமேளா நடக்கும் பகுதியை தனி மாவட்டமாக அறிவிக்க, பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து, கும்பமேளா நடக்கும் பகுதியை தனி மாவட்டமாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த மாவட்டத்துக்கு மஹா கும்பமேளா என பெயரிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை