உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலியை 50 துண்டுகளாக்கிய கொடூரம்: தெரு நாயால் சிக்கிய கசாப்பு கடை காதலன்

காதலியை 50 துண்டுகளாக்கிய கொடூரம்: தெரு நாயால் சிக்கிய கசாப்பு கடை காதலன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில், காதலியை கொலை செய்து, 40 - 50 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய கசாப்புக் கடைக்காரர், தெரு நாயால் போலீசில் சிக்கினார்.ஜார்க்கண்டின் குந்தி மாவட்டம், ஜோர்தாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா, 25. இவருக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தமிழகம் வந்தனர். இங்கு, கசாப்பு கடை ஒன்றில் இறைச்சி வெட்டும் பணியில் நரேஷ் சேர்ந்தார். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர்.ஒருகட்டத்தில் ஜார்க்கண்டில் உள்ள சொந்த கிராமத்துக்கு தனியாக திரும்பிய நரேஷ், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணை கிராமத்திலேயே விட்டுவிட்டு தமிழகம் திரும்பினார். திருமணம் ஆன விஷயத்தை காதலியிடம் சொல்லாமல் மறைத்தார். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என, காதலி தொடர்ந்து வற்புறுத்தியதால், இருவரும் கடந்த 8ம் தேதி குந்தி மாவட்டத்துக்கு வந்தனர்.காதலியை வீட்டுக்கு அழைத்து செல்லாமல், ஜோர்தாக் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு நரேஷ் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து, அவரது கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்தார். பின், இறைச்சி வெட்டும் கத்தியால் காதலியின் உடலை 40 - 50 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசினார். பின், வீடு திரும்பி மனைவியுடன் இயல்பாக இருந்துள்ளார்.இந்த கொலை நடந்து 15 நாட்களுக்கு பின், ஜோர்தாக் கிராமத்தில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று வெட்டப்பட்ட மனித கையை கவ்வியபடி சென்றுள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் போலீசில் தெரிவித்தனர். போலீசார் காட்டுப்பகுதியில் சோதனையிட்ட போது, மனித உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அந்த இடத்தில் கிடந்த பெண்ணின் கைப்பையில் இருந்து அவரது ஆதார் அட்டை உள்ளிட்ட உடைமைகளை போலீசார் கைப்பற்றினர்.பெண்ணின் தாய் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்ணின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் தாய் நரேஷ் மீது சந்தேகம் தெரிவித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். குற்றத்தை நரேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Krishnamurthy Venkatesan
நவ 30, 2024 16:51

மிருகங்களை வெட்டி வெட்டி மிருகமாக ஒருவனின் மிருகத்தனமான செயல். சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாததால் நேர்ந்த வினை.


Indian
நவ 30, 2024 13:35

எவ்வளவு கொடூர மனம் . இவன் வாழ தகுதி அற்றவன் . வளைகுடா நாடு என்றால் இந்நேரம் இவன் செத்து போய் இருப்பான் ..


Rasheel
நவ 30, 2024 10:48

கோர்ட்டுகள் காலம் கடந்து, சரியான தண்டனை கொடுக்காமல், வாரத்திற்கு ரெண்டு முறை சிக்கன் பிரியாணி, ஒரு முறை இனிப்பு பண்டம், வருடத்திற்கு இரண்டு முறை பரோல், சிகரட் முதல் எல்லாமும் சிறையில் என்று இருந்தால் நாடு எப்படி உருப்படும்?


skanda kumar
நவ 29, 2024 11:37

இன்று திருப்பூர் ஒரு வீட்டில் 3 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் tamil nattil.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 09:07

அடடா, இந்த கொடூரம் ஜார்கண்டிலா? இங்க எங்கியாவது நடந்திருந்தால், டாஸ்மாக், திராவிஷம், ஒண்கொள் கோவால் புற என்றெல்லாம் எழுதி நடுவுல மானே தேனே லாம் போட்டு கும்மி அடித்திருப்பார்களே.. வட போச்சே


Ramesh Sargam
நவ 29, 2024 13:22

நீங்க சொல்ல நினைத்ததை மறைமுகமாக சொல்லிவிட்டீர்கள். பலே கில்லாடி ப்ரோ நீங்கள்.


Mohan
நவ 29, 2024 08:22

எனது சொந்த கருத்து: என்றைக்கு யூ டியூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் அரபு நாடுகளில் தங்களது மத எதிரிகள் என சொல்லி ஆண்களையும், விபசாரம் செய்தார் என குற்றம் சாட்டி பெண்களையும் பப்ளிக்காக மக்கள் முன்னிலையில் காட்டுமிராண்டித்தனமாக கழுத்தை அறுத்து விரல்களை வெட்டி, அதை வீடியோ எடுத்து வெளியிட்டார்களோ அன்று முதல் கிரிமினல் எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு பயம்போய்விட்டது. இன்னொரு மனித உயிரை எடுக்க எந்த ...... உரிமை இல்லை, அவ்வாறு உயிரை எடுக்க தூண்டுபவன் மனிதனே அல்ல. கற்கால காட்டுமிராண்டி. அந்த மனித நேயமற்ற காட்டுமிராண்டி யாராக, எதுவாக இருந்தாலும், மனித இனத்துக்கே களங்கம், மற்றும் ஒதுக்கப்பட வேண்டிய எதிரி. பசு மாடு மற்றும் கன்றுகளையும், புத்தியற்ற ஆடுகளையும் கொன்று தோலுரிக்கும் வேலையை செய்தால் இந்த மாதிரி தான் செய்வான்.


Thiagu
நவ 29, 2024 08:15

இவனைய அதே போல் செய்வீர்களா போலீஸ் சார்


N.Purushothaman
நவ 29, 2024 07:34

இது போன்ற செய்திகளை இவ்வளவு விலாவாரியாக தருவதை தவிர்க்க வேண்டும் .....முதல் முதலில் டெல்லியில் இது போன்ற ஒரு கொலை பெரிய அளவில் செய்தியாக வெளியானதால் அதிர்ச்சி ஏற்படுத்தியது அல்லாமல் இதே பாணியில் பல இடங்களில் கொலைகள் நடக்க ஆரம்பித்துவிட்டன ...கொல்லப்பட்ட பெரும்பாலானோர்கள் பெண்கள் ....பெண் தோழி என்கிற பெயரில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பிறகு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் போது இருவருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அது கொலையில் முடியும் அளவிற்கு செல்கிறது ...அதுவும் கொடூரமான கொலை ...உடல்பாகங்களை துண்டுகளாக்குவது என்பது மனிதம் செத்து எந்த அளவிற்கு மனிதர்களிடையே ஆக்ரோஷம் மற்றும் கொடூர புத்தி ஆட்டி படைக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது ....தமிழகத்திலும் இது போன்ற கொலைகள் நடக்க ஆரம்பித்து விட்டன ...


N Annamalai
நவ 29, 2024 06:44

கொடூரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை