மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
பெங்களூரு: லோக்சபா தேர்தலின் போது, கர்நாடக மாநில பா.ஜ.,வின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில், காங்கிரசுக்கு எதிராக வெளியான வீடியோ தொடர்பாக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உட்பட இருவர் மீது தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.நடப்பாண்டு லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராமில், 'ராகுல், நரேந்திர மோடியின் அனிமேஷன் வீடியோ வெளியிட்டது. அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் அல்லாதவர்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்படும்' என கூறப்பட்டிருந்தது.இதை கண்டித்து, கலபுரகி மாவட்டம், ஜுவர்கியின் பிரவீன் குமார் பாட்டீல், கலபுரகி சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அக்கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யும்படி, நட்டாவும், மாளவியாவும், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை, நீதிபதி நாகபிரசன்னா தலைமையில் நடந்து வந்தது.விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் குமார் வாதிடுகையில், ''பா.ஜ.,வின் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட விவகாரம், வகுப்புவாத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இதை உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் கூறி உள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.மாநில கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜெகதீஷ் வாதிடுகையில், ''பா.ஜ.,வின் சமூக வலைதள பதிவேற்றம், வெறுப்பை துாண்டுவதாக உள்ளது. இதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''நட்டா, அமித் மாளவியா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.
26-Nov-2024