உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை குறித்து அவதூறு; பிரபல இயக்குநர் மீதான வழக்கு தள்ளுபடி

நடிகை குறித்து அவதூறு; பிரபல இயக்குநர் மீதான வழக்கு தள்ளுபடி

திருவனந்தபுரம்: நடிகை மற்றும் அவரது நண்பர்கள் குறித்து சமுக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக பிரபல இயக்குநர் மீது தொடரப்பட்ட வழக்கை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நடிகர் மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த படத்தை இயக்கியவர் ஸ்ரீகுமார் மோகன். இவர் தன்னையும், தனது நண்பர்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு, தன்னை அவமானப்படுத்தி வருவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பிரபல மலையாள முன்னணி நடிகை கடந்த 2019ம் ஆண்டு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிபதி மனு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நடிகையால் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டதாகவும், தன் மீதான புகாரை சட்டப்படி எதிர்கொள்வேன், எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புகார் அளித்த நடிகை ஆஜராகவில்லை. ஸ்ரீகுமார் மேனன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரம் இல்லை எனக்கு திருச்சூர் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை தள்ளுபடியும் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
நவ 06, 2024 20:40

போதுவாக எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லா நீதிமன்றங்களும் புகார் அளித்தவர்கள் ஆஜராகவில்லை என்றாலோ அல்லது மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரம் இல்லை என்றாலோ வழக்கை தள்ளுப்படு செய்யும் பொது மற்ற வழக்குகளை சரிபார்க்க நேரத்தை வீணாக்கியதற்காக புகார் அளித்தவர்கள் தகுந்த தண்டனையாக ரூபாய் ஒரு லட்சம் அல்லது ஐம்பது ஆயிரமாக நீதி மன்றத்திற்கு காட்டசொல்லவேண்டும் அப்போதுதான் வெட்டி வழக்குகள் குறையும் நீதி மன்றங்களின் கண்ணியம் காப்பாற்றப்படும் நீதிபதிகளும் உண்மையான விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை விசாரிப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை