வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Super
கண்ணை சிமிட்டாமல் நல்லது செய்ய நினைப்பது பாராட்டப்படத்தக்கது.
இண்டி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின்
இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி… திராவிட மாடல்ன்னா சும்மாவா
புதுடில்லி : கண்ணை சிமிட்ட முடியாததால், வங்கி கணக்கு துவக்க முடியாதவர் தொடர்ந்த வழக்கில், 'டிஜிட்டல்' வாய்ப்புகளும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்ற முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியது.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதைச் சேர்ந்த பிரக்யா பிரசுன், 'ஆசிட்' வீச்சால் பாதிக்கப்பட்டவர். தொண்டு நிறுவனத்தை நடத்தி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.இவர் வங்கி கணக்கு துவக்குவதற்காக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு சென்றுள்ளார். கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளர் குறித்த தகவல்களை பதிவு செய்யும்போது, கண்ணை சிமிட்டும்படி கூறியுள்ளனர். ஆனால், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவரால் கண்ணை சிமிட்ட முடியவில்லை. இதனால், வங்கி கணக்கு துவக்க முடியவில்லை.சமூக வலைதளத்தில் இது தொடர்பாக அவர் பதிவிட்டார். அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துகளை பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு சலுகையாக அவருக்கு, கண்ணை சிமிட்டாமலேயே சேமிப்பு கணக்கை வங்கி துவக்கி வைத்தது.'மொபைல் போன் சிம் கார்டு' வாங்க சென்றபோதும், இதே போன்ற அனுபவத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. தன்னைப் போன்று பாதிக்கப்பட்டோர், விபத்தில் சிக்கியோர், கண் பார்வை இல்லாதோர் போன்றவர்களுக்கு கே.ஒய்.சி., விதிமுறைகளில் திருத்தம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 2023ல் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை, நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மஹாதேவன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. கே.ஒய்.சி., தொடர்பான நடைமுறைகளில் மாற்றம் செய்யும்படி, 20 பரிந்துரைகளை அமர்வு பிறப்பித்துள்ளது. நாடு முழுதும் இதை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.மேலும் அமர்வு கூறியுள்ளதாவது:
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ள நிலையில், அது அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கே.ஒய்.சி., விதிமுறைகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல; கிராமப்புற மக்கள், வயதானோர் என, பலரும் பாதிக்கப்படுகின்றனர்.டிஜிட்டல் அணுகல் என்பதை, அரசியல்அமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்படும் தனிநபர் உரிமைகளில் ஒன்றாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
Super
கண்ணை சிமிட்டாமல் நல்லது செய்ய நினைப்பது பாராட்டப்படத்தக்கது.
இண்டி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின்
இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி… திராவிட மாடல்ன்னா சும்மாவா