உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பதிலளிக்க வேண்டும்! கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் காட்டம்

தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பதிலளிக்க வேண்டும்! கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் காட்டம்

பாலக்காடு,“மலப்புரம் தங்க கடத்தல் குறித்து குற்றஞ்சாட்டும் முதல்வர் பினராயி விஜயன், இதற்கு தக்க விளக்கம் அளிக்க வேண்டும்,” என, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு அகதேத்தறை சபரி ஆசிரம நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:மலப்புரம், கரிப்பூர் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை தேசத்துரோக செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர் என, ஆங்கில நாளிதழ் ஒன்றில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதற்கு, முதல்வர் தக்க விளக்கம் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வரே குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. முதல்வர் கூறியது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் விளக்கம்அளிக்க வேண்டும். தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை கேட்க உள்ளேன்.தங்க கடத்தல் எத்தனை காலமாக நடக்கிறது என்பது குறித்து, அரசுக்கும் முதல்வருக்கும் நன்கு தெரியும்.இந்த விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் அங்கவஸ்திரத்தில் தீ!

கேரள மாநிலம், பாலக்காடு அகதேத்தறை அருகே உள்ள சபரி ஆசிரமத்துக்கு மஹாத்மா காந்தி அவரது மனைவி கஸ்துாரிபாய் உடன் வந்துள்ளார். இந்த ஆசிரமத்தின் நுாற்றாண்டு விழா, நேற்று நிறைவடைந்தது. இதில் பங்கேற்க வந்த அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான், ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது, மஹாத்மா காந்தியின் படத்திற்கு முன்பு மலர் துாவி வணங்கும்போது, அருகில் இருந்த குத்துவிளக்கில் அவரது அங்கவஸ்திரம் பட்டு தீப்பற்றியது. இதை அருகில் இருந்தோர் கவனித்து, உடனே தீயை அணைத்தனர்; கவர்னர் காயமின்றி தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
அக் 02, 2024 14:42

மலப்புரம் மாவட்டம் அவங்க ஊரு. நடப்பது அவங்க தொழில். உங்களைத்தான் தங்களது ஆளில்லைன்னு ஒதுக்கிவிட்டார்களே


ஆரூர் ரங்
அக் 02, 2024 14:41

சோலார் சரிதா முதல் சொப்னா வரை கேரள அரசியலில் விளையாடிய தங்க மங்கைகள் ஏராளம்.


sankaranarayanan
அக் 02, 2024 08:51

கேரளத்தில் தங்கம் கடத்தல் மேற்கு வங்கத்தில் பங்களாதேசிகளின் கடத்தல் தமிழகத்தில் கஞ்சா கடத்தல் கர்நாடகத்தில் மூடா பிளாட்டுகள் கடத்தல் டெல்லியில் மதுபான விவகார கடத்தல் இப்படி எல்லா மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கும் கடத்தல்களை உச்ச நீதி மன்ற ஒரு போதும் கவனிக்கவே இல்லையே இவைகளுக்கு ஒரு முற்றுப்புல்லை எப்போதுதான் வரும்


Kasimani Baskaran
அக் 02, 2024 05:32

தகுதியே இல்லாத தங்க மங்கைக்கு ஐடி வேலை ஒன்றை புதிதாக உருவாக்கி சித்து வேலை செய்ததற்க்கே தண்டனை இல்லை. பிறகு எப்படி பதில் சொல்வார்கள்.


சமீபத்திய செய்தி