உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீச்சில் குப்பை அள்ளிய முதல்வரின் மனைவி

பீச்சில் குப்பை அள்ளிய முதல்வரின் மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 10 நாட்கள் நீடித்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பின், விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கப்பட்ட மும்பையின் ஜூஹூ கடற்கரை பகுதியில் துாய்மைப் பணிக்கு, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, அம்ருதா பட்னவிசின் 'திவ்யராஜ்' என்ற அரசு சாரா அறக்கட்டளை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, ஜூஹூ கடற்கரையில் நேற்று துாய்மைப் பணியில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷண் கக்ராணி உள்ளிட்டோருடன் அம்ருதா பங்கேற்றார். ''ஒரே ஒரு பூமி தான் உள்ளது. அதன் கடற்கரைகளையும், காடுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை. விநாயகர் சிலைகள் கரைப்புக்கு பின், மும்பை ஜூஹூ கடற்கரையில் துாய்மைப் பணிக்கு ஏற்பாடு செய்தோம். இதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன,'' என அம்ருதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V Venkatachalam
செப் 08, 2025 14:13

எந்த இடமாக இருந்தாலும் சுத்தம் பண்ணி வைக்குறது நல்ல விஷயந்தானே. அதுல இவன்களுக்கு ஏன் எரிச்சல் வருது?


அப்பாவி
செப் 08, 2025 09:55

வினாயக சதுர்த்தி கொண்டாடி குப்பை போட்டு ஊரையே நாஸ்தி பண்ணிட்டாங்க. இவிங்க சாஸ்திரத்துக்கு ரெண்டு குபையை அள்ளிப்போட்டு...


பாலாஜி
செப் 08, 2025 09:18

விளம்பர நடிப்பை மஹாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் செய்திருக்கவேண்டும். மனைவியை பயன்படுத்தி விளம்பரம் செய்ததால் பாஜகவில் பதவி கிடைக்கும் என முயற்சியா?


தாமரை மலர்கிறது
செப் 08, 2025 06:14

பாட்னவிஸ் பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர். நிதின் கட்காரிக்கு பிறகு அடுத்த பிரதமர் ஆவார்.


Kasimani Baskaran
செப் 08, 2025 04:08

அருமை.. பாராட்டப்பட வேண்டிய விஷயம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் கூட.


xyzabc
செப் 08, 2025 03:05

மாடல் ஆட்சியாளர்கள் அபிவிருத்தியாக துர்கா அம்மையார் பூஜை செய்வார். அதுவும் சிறப்பு அம்சம்.


புதிய வீடியோ