குளிர் குறைந்தது; வெயில் வாட்டுது
பெங்களூரு; கர்நாடகாவில் வெயிலின் அளவு 2 முதல் 4 டிகிரி அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு:கர்நாடகாவில் இந்த முறை வெப்பம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்படும். குறிப்பாக இனி வரும் நாட்களில், வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். ஏற்கனவே, பெங்களூரில் அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரியாக பதிவாகி உள்ளது. பெங்களூரு, பெங்களூரு ரூரல், துமகூரு, ஷிவமொக்கா, மைசூரு, மாண்டியா, கோலார், குடகு போன்ற மாவட்டங்களில் வானிலை வறட்சியாகவே காணப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.