உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி

நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மந்திரம் என சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலைகள், தொழில், சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் ரூ.14,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நவ ராய்பூர் அடல் நகரில் உள்ள சத்தீஸ்கர் விதான்சபாவின் புதிய கட்டடத்தில், வாஜ்பாயின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:எந்தவொரு உலகளாவிய நெருக்கடியிலும் இந்தியா எப்போதும் தீர்வு காண முன் நிற்கிறது. உலகில் எங்கும் ஒரு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், ஒரு பேரழிவு ஏற்படும் போதெல்லாம், இந்தியா உதவிகள் வழங்குவதில் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறது. மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மந்திரம் மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. நான் பல தசாப்தங்களாக உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன். நான் இங்கு விருந்தினராக இல்லை; நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று, சத்தீஸ்கர் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களும் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று பல மாநிலங்களும் தங்கள் நிறுவன தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்த அனைத்து மாநிலங்களின் மக்களுக்கும் அவர்களின் நிறுவன நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

குழந்தைகளுடன் உரையாடிய மோடி!

முன்னதாக, ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில் நடந்த விழாவில், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், குழந்தைகளுடன் மோடி கலந்துரையாடினார். இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குழந்தைகளிடம் ஆவலுடன் பேசும், போட்டோகள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

GMM
நவ 01, 2025 17:35

நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பாதுகாப்பு அவசியம். மத்திய அரசு பொறுப்பில் உள்ளது. தென் இந்தியா மொழி வாரி பிரிப்பு தவிர்த்து இருக்க வேண்டும். தமிழகத்தில் தெலுங்கு, கன்னடா, மலையாள மக்கள் சரி பங்கு. ஆனால் மாநில ஆட்சி மொழி தமிழ். பெரும்பான்மை மக்கள் பேசியதால் இந்தி இணைப்பு மொழி. ஆனால் அடிப்படை அறிவை கூட பெற திராவிட பிரிவினை நிழல் அனுமதிக்கவில்லை. 100 ஆண்டுகள் பிற மாநில உழைப்பை தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் பெற்றன. சற்று வசதி வந்த பின், ஊழல் மறைக்க இனம், பிரிவினை, மொழி துவேசம். மாநிலம் மாவட்டங்களை ஒடுக்கிவிட்டன. இரட்டை நிர்வாக முறையால் மத்திய அரசுக்கு மாநிலம் நீதிமன்ற உதவி மூலம் சவால் விடுகின்றன. இதற்கு விடை தான் வளர்ச்சியை உறுதி படுத்தும்.


Narayanan Muthu
நவ 01, 2025 20:35

மனசாட்சியே இல்லாதவர்கள் கருத்து எப்படி இருக்கும் என்பதற்கு மேற்படி கருத்து உதாரணம்.


ராஜா
நவ 01, 2025 16:59

Correct Gujarat is in India with a1,a2,a3


Thirumal s S
நவ 01, 2025 15:23

பொய்


RAMESH KUMAR R V
நவ 01, 2025 14:53

இந்தியா உலகின் குரு என்பதே இந்திய மக்களின் தாரகமந்திரம்.


Narayanan Muthu
நவ 01, 2025 20:36

வாய்ப்பே இல்லை


திகழ்ஓவியன்
நவ 01, 2025 13:47

வெளி மாநில மக்களுக்கு யாருக்கு எங்கு என்ன தொல்லை நேர்ந்தது.. ஒரு பேச்சுக்கு அப்படியே இருந்தாலும், ஒரு தேசிய கட்சி அப்படி பேசலாமா. தேவையே இல்லாமல், பீஹார் தேர்தல் வெற்றிக்காக, தமிழ்நாட்டை பீஹாருக்கு எதிராக திருப்பி விடுகிறது பிஜேபி.. லட்சக்கணக்கான பீகார் மக்களுக்கு தமிழ்நாடு வாழ்வளிக்கிறது என்பதை மறந்துவிட கூடாது.


தெய்வேந்திரன்,சத்திரக்குடி இராமநாதபுரம்
நவ 01, 2025 14:58

ஏலே திடல் ஓவியா அதெப்பிட்றா திமுகவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துர்ற..


Kumar Kumzi
நவ 01, 2025 15:21

திமுக கொத்தடிமை திராவிஷ திமுக அமைச்சர்கள் பேசாத பேச ஆமா தமிழ்நாடு அப்பன் வீடு சொத்தா துறைமுகங்கள் விமான நிலையங்கள் பெருந்தெருக்கள் எல்லாம் யாரோட கட்டுப்பாட்டில் உள்ளது


திகழ்ஓவியன்
நவ 01, 2025 13:36

நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: ஆமாம் வளர்ந்த மாநிலம் ஆகவே அவர்கள் வரியை உழைப்பை உங்களுக்கு தருவேன்


Senthoora
நவ 01, 2025 16:59

ஆமா, நடுவளரணும் நான் அடிக்கடி வெளிநாடு விசிட் பண்ணனும், அதானி நல்லா இருக்கனும்,


Kumar Kumzi
நவ 01, 2025 17:11

அடேங்கப்பா ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்டைங்க கதறி கதறியே செத்துருவானுங்க போலருக்கே ஹாஹாஹா


ஆரூர் ரங்
நவ 01, 2025 17:27

அப்போ வளர்ந்துவிட்ட முன்னேறிய சாதிகளுக்கு ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீங்க? பிற்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி அளிப்பது நியாயம்தானே?.


புதிய வீடியோ