உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றவாளி தப்பிச்செல்ல உதவினார்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது வழக்கு

குற்றவாளி தப்பிச்செல்ல உதவினார்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போலீஸ் விசாரணையில் குறுக்கீடு செய்து குற்றவாளி தப்பிக்க வழி வகுத்ததாக, ஆம் ஆத்மி ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ., அமனத்துல்லா கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ., அமனத்துல்லா கான் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்றுள்ளார். கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்த ஷாபாஸ் கானை கைது செய்ய டில்லி போலீசார் ஜாமியாவில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கிய இருந்தனர். அதிகாரிகள் ஷாபாஸ் கானை கைது செய்தபோது, அமனத்துல்லா கான் தலையிட்டு, கைது நடவடிக்கையை கேள்வி எழுப்பி, அந்த நபர் குற்றவாளி அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினருக்கும் குற்றப்பிரிவு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்த குழப்பத்திற்கு மத்தியில், ஷாபாஸ் கான் தப்பினார். இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:அமனத்துல்லா கானும் அவரது ஆதரவாளர்களும் சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்குத் தீவிரமாகத் தடையாக இருந்தும், கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி, இறுதியில் சந்தேக நபர் தப்பிச் செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு புகார் அளித்துள்ளது.மேலும் எம்.எல்.ஏ., அமனத்துல்லா கான் மீது சட்ட நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.Ramakrishnan
பிப் 11, 2025 23:02

உங்கள் ராஜ்யம். இனி நீங்கள் வைத்ததே சட்டம். கவர்னர் கண்டுகொள்ளவே மாட்டார். நடத்துங்க... ராஜாங்கத்தை....


Karthik
பிப் 11, 2025 09:42

சந்தேகநபர் தப்பி ஓடியபோதே அவன் குற்றவாளியாகிவிட்டான். போலிஸ் உடனே அவனை சுட்டிருந்தால், அங்கு வந்து போலீஸிடம் ஒரு மார்க்கமாக பேசியவனும் ஓடியிருப்பான், அடுத்த தோட்டாவை இவனுக்குள் இறக்கி இருந்தால் இந்நேரம் கேஸ் க்ளோஸ்டு. சட்டத்துக்கு ஒரு சல்யூட்டே அடிச்சிருக்கலாம்.


Laddoo
பிப் 11, 2025 07:24

டெல்லி கலவரத்தில் நேரடியாக பங்கேற்றவன். ரொஹிங்கியாகள் உதவியுடன் வெல்பவன். சுளுக்கெடுத்தால் கூட சரியாக மாட்டான். கூப்பிடுங்க என்கவுன்டர் ஸ்பேஷ்லிஸ்ட


முக்கிய வீடியோ