உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு, சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2xmr7d5c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி பேசியதாவது: ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் நினைவிடம் இந்தியாவின் சுயமரியாதை, ஒற்றுமை மற்றும் சேவைக்கான தொலை நோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது . நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த நாள் அனைவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரட்டும். வாஜ்பாய் மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்தநாள் இன்று. இந்த இரண்டு தலைவர்களும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தங்கள் அர்ப்பணிப்புப் பணியின் மூலம் நமது நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத முத்திரைகளைப் பதித்துள்ளனர்.உத்தரப்பிரதேசத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்காக உலகளவில் அறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாகுபாடு இல்லாமல் அனைத்து ஏழைகளுக்கும் அரசுத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரின் கூட்டு முயற்சிகளும் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்திய பிரதமரை நான் அன்புடன் வரவேற்கிறேன். நமது பிரதமர் 29 நாடுகளிலிருந்து மிக உயர்ந்த விருதுகளை பெற்றிருப்பது மிகுந்த பெருமைக்குரியது. இந்த சந்தர்ப்பத்தில், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி , பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் சிலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது இந்த நாளை தேசத்திற்கு மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. இன்று பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளும் கூட, அவரது நினைவைப் போற்றும் வகையில் நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு ராஜ்நாத் பேசினார். திறப்பு விழாவிற்குப் பிறகு, பிரதமர் மோடி, மற்ற தலைவர்களுடன் சேர்ந்து, வளாகத்திற்குள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அவர், வாஜ்பாய், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட காட்சிப் பொருட்களை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V RAMASWAMY
டிச 25, 2025 18:43

நிச்சயம் கனவு நனவு ஆகும். ஆனால் அதற்கு மக்களின் பல வாழ்வுமுறை அணுகுமுறைகளிலும் கண்டிப்பான மாற்றங்கல் தேவை. குடும்பத்திலும் வெளியிலும் மரியாதை, ஒழுக்கமுடன் நடத்தல், சுத்தம், சுகாதாரம் பேணல், கண்ட இடங்களில், குப்பை கூளங்கள் எறியாமல், , துப்பாமல், மல ஜலங்கள் கழிக்காமல், அதிக சப்தமுடன் பிறருக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் பேசாமல் மெதுவாகப் பேசுவது, இன்னும் பலப்பல நடைமுறையில் கொண்டு வருவது. அரசு சம்பத்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் படித்த திறன் மிக்கவர்களாக லஞ்சமின்றி செயல் படுவது, முதலியன.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 25, 2025 18:39

வளர்ச்சி அடைந்த இந்தியா >>>> அதுக்கு மூர்க்கப்பதர்கள் விடுவார்களா >>>> 2047 க்குள்ள பாரதத்தை வேற லெவல்ல கொண்டு போக சதித்திட்டம் இருக்குது .....


Muralidharan S
டிச 25, 2025 18:24

அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்.. கவுன்சிலர்களில் ஆரம்பித்து முதன் மந்திரி வரை அரசியலில் அரசியல்வாதிகளால் செய்யப்படும் ஊழல். சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரிடம் மீது மட்டும் விதிக்கப்படும் வரிவிதிப்பு மற்றும் அதிகப்பணம் சம்பாதிக்கும் பெரும்பாலானவர்களின் வரி ஏய்ப்பு, ஒரு முடிவே இல்லாமல் தொடரும் ஜாதியின் அடிப்படையிலான இடஒதுக்கீடு.. அதையும் கிரீமீ லேயர் மட்டுமே தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.. அடிமட்ட ஏழைகள் இடஒதுக்கீட்டு பயனை அனுபவிப்பதில்லை.... தகுதியானவர்கள், அதிக திறமைவாய்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் மறுக்கப்படும் வாய்ப்பு.. இது போல இன்னும் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகள்.. அதுவும் ஊழல் அரசியல்வியாதிகளின் சொத்துக்குவிப்பு உள்நாட்டிலும் , வெளிநாடுகளிலும் ... இதை எல்லாம் முற்றிலும் ஒழித்தால்தான் நிஜமாகவே இந்தியா வளர்ச்சி பெற்று வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இடம் பெரும்.. உடலின் வளர்ச்சி என்பது உடலின் ஒவ்வொரு உறுப்பாக்களும் சரிவிகிதத்தில் அது அதன் அளவில் வளர்ந்தால்தான் அது வளர்ச்சி.. இல்லேயேல் அது வீக்கம் என்று அர்த்தம்.. அது போலத்தான் நமது தேசமும்.. வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்களின் , ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியாக இருந்தால்தான் அது வளர்ச்சி.. வளர்ச்சி அடைந்தால் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சிதான்.. ஆனால் அதற்க்கு ஒழிக்கவேண்டியது, ஒழிய வேண்டியது மேலே சொன்ன குறைபாடுகள் அனைத்தும்.. இல்லையேல் இது வெறும் பகல் கனவுதான்.. பாவம் ... அப்துல் கலாம் அவர்கள் விஷன் 2020 - கனவு கண்ட மாதிரிதான்..வெறும் கனவாகவே போகும்.. ஊழலும் ஒழியவில்லை.. லஞ்சமும் ஒழியவில்லை.. ஊழல் அரசியல்வியாதிகளும் ஒழியவில்லை..


Vasan
டிச 25, 2025 17:48

தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விட்டது, நிறைவை பெற்று விட்டது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.


N Sasikumar Yadhav
டிச 25, 2025 18:30

ஆம் ஆட்டய போட கடன் வாங்குவதில் திராவிட மாடல் முதலிடம் சட்டம் ஒழுங்கு பேணிகாப்பதில் தமிழகம் உலகத்திலேயே முதலிடம்


சிலைமான்
டிச 25, 2025 17:20

முன்னேறிடுவோம்.


முக்கிய வீடியோ