உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்

உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தரகண்ட் சென்ற தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமாரின் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள குக்கிராமத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உறைபனியில் இரவு முழுதும் அந்த கிராமத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.உத்தரகண்ட் மாநிலத்தில் மலை கிராமங்களில் அமைந்துள்ள ஓட்டுப்பதிவு மையங்களில் தேர்தல் அலுவலர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து நேரடியாக அறிவதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், முனிசியாரி தாலுகா அருகே குக்கிராமம் ஒன்றில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.அந்த வானிலையில் மீட்பு ஹெலிகாப்டர் வருவதும் சிரமம் என்பதால், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் இரண்டு தேர்தல் அதிகாரிகள், இரண்டு பைலட்டுகள் ஆகியோர் அந்த கிராமத்திலேயே, ஒரு வீட்டில் இரவு முழுதும் தங்கினர். அங்கு, வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழ் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வானிலை நேற்று காலை சீரடைந்ததும், தலைமை தேர்தல் கமிஷனருடன் ஹெலிகாப்டர் பத்திரமாக புறப்பட்டுச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
அக் 18, 2024 07:18

இந்த தேர்தலால் மக்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் சீரழிக்கப் படுகிறது என்பதை முதலில் அறிந்து பிறகு தேர்தல் பற்றி அறிவதே சிறந்ததது, ஒரே பணிகளுக்கு எத்தினை மக்கள் பிரநிதிகள், பொது மக்களும், நேர்மையாக வாழ்பவர்களும் ஒவ்வொரு நொடியும் எத்தினை துன்பங்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் ஆளாகிக் கொண்டு இருக்கின்றனர் என்று சிந்திக்கவேண்டியது இந்த துறைதான், ஏமாற்றிப்பிழைப்பவர்கள் ஒருவரை ஒருவர் கைகாட்டி குற்றம் சுமத்திக்கொண்டு, மக்களை முட்டாளாக்கி, பல லட்சம் கோடி என்று வருமானதை பெருகிக்கொண்டே போகிறார்கள், இதன் வளர்ச்சிதான் மிக அதிகமாக இருக்கிறது, அரைகுறையாக உடை உடுத்தினால் ஆபத்து என்று கூறுபவர்கள் மீது சட்டம் பாய்கிறது, யார்தான் மக்களைக் காப்பாற்ற இருக்கிறார்கள், செக்ஷனின் ஆன்மாவும் நம்மை விட்டு சென்றுவிட்டது, வந்தே மாதரம்


Subramanian
அக் 18, 2024 06:13

Now he is learn it first hand


Kasimani Baskaran
அக் 18, 2024 05:21

சிரமமான இடம் என்பதன் பொருளை நிச்சயம் தேர்தல் கமிஷனர் புரிந்து கொண்டு இருப்பார்.


சமீபத்திய செய்தி