உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கிம் தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் முதல்வர்

சிக்கிம் தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்டாக்: சிக்கிம் தேர்தலில், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளார்.சிக்கிமில் பட்லோக் தொகுதியில் போட்டியிட்ட பவன் குமார் சாம்லிங், 3,063 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர் அம்மாநிலத்தின் முதல்வராக 25 ஆண்டுகள் இருந்த அனுபவம் உள்ளது. கடந்த தேர்தலில், சிக்கிம் கிராந்திகாரி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எஸ்டிஎப் கட்சியின் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடையும் நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறியதாவது: பவன் குமார் சாம்லிங், கடந்த தேர்தலிலும் தோல்வியடைந்தவர். அவர் 25 ஆண்டுகளாக செய்யாத பணிகளை, நாங்கள் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளோம். மக்கள் அதற்காக ஓட்டுப்போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ems
ஜூன் 02, 2024 16:06

அவர் 25 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை.... அப்படி இருக்க... எப்படி தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை