உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. மொத்த 15 பக்க அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், 30 வினாடிகளில் கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0cskpefx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் ஒரேயொரு பயணியை தவிர, 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்துள்ளது.இதன் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை12) அதிகாலை வெளியானது. அந்த அறிக்கையில், சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள் குறித்து ஓர் சிறப்பு அலசல்!* விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 இன்ஜின்களும் செயலிழந்துள்ளது.* ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார்.* சில வினாடிக்கு பிறகு, எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கினாலும், ஒரு இன்ஜின் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது.* கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம். * விமானப் பாதைக்கு அருகில் பறவைகள் நடமாட்டம் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.* இதனால், புறப்பட்ட பிறகு விமானத்தில் ஏற்பட்ட இரட்டை இயந்திர செயலிழப்புக்கான பறவை மோதி நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இல்லை.* விபத்திற்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வெப்ப சேதம் காரணமாக இது இருக்கலாம் * விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடரும். முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

SJRR
ஜூலை 14, 2025 13:14

நீங்கள் கூறிய கருத்தை முற்றிலுமாக வரவேற்கிறேன். நம் வீட்டில் இருக்கும் மேல்நிலை தொட்டிக்கே தானியங்கி மோட்டார்களை வைக்கிறோம். தண்ணீர் குறைந்தால் தானாக இயங்கும். தண்ணீர் நிரம்பினால் தானாக அனைத்துக்கொள்ளும். விமான என்ஜின் இயக்கியவுடன் இதுபோன்ற செயல்கள் தானாக நடக்க வேண்டும். விமானிகள் இதுபோன்று பேசிக்கொண்டார்கள் என்று இதை முடித்துவிட முடியாது.


Ramesh Sargam
ஜூலை 12, 2025 12:07

ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார். இங்குதான் சந்தேகம் அதிகம் வலுக்கிறது. காரணங்களை அறிந்து இப்பொழுது என்ன பயன்? போன உயிர்கள் திரும்பக்கிடைக்குமா? இனியாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 12:00

ஏர் இந்தியா டாடா வாங்கியதில் இருந்தே ஏர் இந்தியா நிறுவனத்தில் பிரச்சினைகள் அவ்வப்போது வந்து சென்று கொண்டே உள்ளது. இந்த விபத்து உச்ச கட்டம். ஆகவே தனியாக புலனாய்வு செய்ய வேண்டும். ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இன்னாள் ஊழியர்கள் அனைவரையும் தனித்தனியே விசாரிக்க வேண்டும். அவர்களின் மொபைல் போன்கள் முழு ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை செய்ய வேண்டும்.


முதல் தமிழன்
ஜூலை 12, 2025 11:23

பொதுவாக இந்தியாவில் பராமரிப்பு வேலைகள் ஒழுங்காக செய்வது இல்லை. ரயில் பாதைகள் மோசம். ஏதோ கடவுள் புண்ணியம் ...


AaaAaaEee
ஜூலை 12, 2025 11:20

Terrorism


AaaAaaEee
ஜூலை 12, 2025 11:20

தேர்ரோரிசம் some mu behind it


Indian
ஜூலை 12, 2025 11:09

இரண்டு என்ஜின் களும் சேர்த்தாப்புல பழுதடையும் அளவுக்கு தான் பராமரிப்பு உள்ளதா ???. ஏன் எமிரேட்ஸ் , கத்தார் , போன்ற விமான நிறுவனங்களில் விமானம் என்ஜின் இது போன்று பழுதாவதில்லை ??. ஏதாவது எமிரேட்ஸ் , கத்தார் விமானம் இது போன்று பொத்தென்று விழுந்தது உண்டா ??


Godfather_Senior
ஜூலை 12, 2025 10:54

ஆம் ஐயா. ஒன்றேகால் கோடி தரையில் உயிரிழந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.


Svs Yaadum oore
ஜூலை 12, 2025 10:34

எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளாராம் ... அதற்கு தான் அடைக்கவில்லை என்று பதிலாம் .....இப்படி விமானம் புறப்படும் நேரத்தில் பைலட் எரிபொருள் வால்வை அடைக்க வாய்ப்பே தரக்கூடாது ...பைலட் தவறாக செயல்பட்டாலும் விமானத்தின் வடிவமைப்பு அதற்கு இடம் தரக்கூடாது .....இது பாதுகாப்பின் அடிப்படை ....இது பைலட் தவறு கிடையாது ...போயிங் கம்பெனி தவறை பைலட் மேல் பழிபோட்டு போயிங் தப்பிக்கவே இதுபோன்ற அறிக்கை.....


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 10:56

தீப்பிடித்தால் உடனே எ‌ரிபொரு‌ள் வால்வை விமானி மானுவலாக மூட வசதியாக வைத்துள்ளார்கள் போலும். உட்புறமாக சற்று அழுத்திக் கொண்டேதான் திறக்க அல்லது மூட முடியும். விமானம் புறப்படும் முன்பு பராமரிப்புப் பணியாளர்கள் சோதித்திருக்க வேண்டும்.


Indian
ஜூலை 12, 2025 11:13

நீரு ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் ஆ ??


raja
ஜூலை 12, 2025 11:24

அருமையாக சொன்னீர்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 10:11

நகர நக்சல் சதிவேலை போல இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை