உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியேறுவதாக அரசை பயமுறுத்த முடியாது: துணை முதல்வர் ஆவேசம்

வெளியேறுவதாக அரசை பயமுறுத்த முடியாது: துணை முதல்வர் ஆவேசம்

பெங்களூரு: “சாலை விவகாரத்தை காரணம் காட்டி அரசை பயமுறுத்த முடியாது; சாலைகளை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது,” என, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு துணை முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த சிவகுமார் உள்ளார். சமூக வலைதளம் கர்நாடகாவில் சாலை வசதி உட்பட உள்கட்டமைப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாக மாநில அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதேசமயம், சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் சேதமடைந்த ரிங் ரோடு சரி செய்யப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இது குறித்து 'பிளாக்பக்' என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யபாஜி தன் சமூக வலைதள பதிவில், 'ஒன்பது ஆண்டு களாக பெல்லந்துார் பகுதியில் எங்கள் அலுவலகம், வீடு இருக்கிறது. தற்போது இங்கே தொடர்வது மிகவும் கடினம். நாங்கள் இங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். இதற்கு காரணம் எங்கள் அலுவலகம் முன் செல்லும், வெளிவட்ட சாலையின் மோசமான நிலை. இந்த சாலை பள்ளங்கள், துாசிகளால் நிறைந்து உள்ளது. ஆதரவு 'சக ஊழியர்களின் சராசரி பயணம் ஒரு வழி பாதையில் தினமும் ஒன்றரை மணி நேரமாக அதிகரித்துள்ளது. சாலையை சரி செய்வர் என்ற நம்பிக்கை குறைவாக உள்ளது. 'கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை' என, பதிவிட்டுள்ளார். ராஜேஷ் யபாஷியின் கருத்துக்கு மேலும் பல தொழிலதிபர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து துணை முதல்வர் சிவகுமார் நேற்று கூறியதாவது: அலுவலகத்தை மாற்றுவது என்பது அவரவரின் தனிப்பட்ட முடிவு. பல வணிக காரணங்களுக்காகவும், இந்த முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம். அதற்காக, சாலை சரியில்லை என்பதை காரணம் காட்ட முடியாது. ரிங் ரோடு சாலைகள் சேதமடைந்திருப்பது உண்மைதான். அதேசமயம், அதை சரிசெய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் இடம்பெயர்வதை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம், பெங்களூருவில் எங்களால் வழங்கப்படும் உள்கட்டமைப்பு வசதியையும் யாராலும் தடுக்க முடியாது. நகரின் பல பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் கேள்வி

ம த சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: பெங் களூரூ நகரின் கவுரவத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. இதற்கு ஆளும் கா ங்., அரசின் முதல்வரும், துணை முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும். பெங்களூரூ உட்பட கர்நாடக மாநிலம், இன்று திறமையற்ற, ஊழல்வாதிகளி ன் கைகளில் சிக்கி தவிக்கிறது. நகரில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மரணக்குழியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பை குவியல். இது தான் கிரேட்டர் பெங்களூரா? அரசு மக்களின் வரிப்பணத்தை விழுங்கி குறட்டை விடுகிறதா? அரசின் தோல்வியை இவ்வளவு கடுமையாக வணிகர்கள் சுட்டிக்காட்டுவது இதுவே முதல் முறை. வரிகள் விதிப்பதில் அரசு ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறது. அதேவேளையில் சாலை பள்ளங்களை மூடுவதில் ஆமையே தோற்றுவிடும் வகையில் பணிகள் நடக்கின்றன. மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப் பணத்தை அரசு என்ன செய்கிறது? பள்ளங்களை மூடு வதற்கு பணமில்லை என்கின்றனர். பணம் யாருடைய பைகளுக்கு செல்கிறது என்பதற்கு பதில் தேவை. பெங்களூரை விட்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டாம். நாம் அனைவரும் சேர்ந்து பெங்களூரை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி