உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவில் ஓய்வு பெறுவதால் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எடுத்த முக்கிய முடிவு

விரைவில் ஓய்வு பெறுவதால் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எடுத்த முக்கிய முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திருமணத்துக்கு பின், மனைவியின் சம்மதம் இன்றி அவருடன் பலவந்தமாக கணவன் உறவு கொள்வதை குற்றமாக கருத வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி விலகிக் கொண்டார். விரைவில் அவர் ஓய்வு பெற உள்ளதால், இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார்.திருமணத்துக்கு பின் மனைவியின் சம்மதம் இன்றி அவருடன் பலவந்தமாக கணவன் உறவு கொள்வதை குற்றமாக கருத வேண்டும் எனக்கூறி டில்லி ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை 2022ல் ஐகோர்ட் பிறப்பித்தது. இதை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. இதனை தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், '' மனைவியை பலவந்தப்படுத்தி கணவன் உறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது. மனைவியின் சம்மதத்தை மீறி, கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும், அதை பாலியல் பலாத்காரமாக கருதுவது மிகவும் கடுமையானது'' எனக்கூறியிருந்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த டி.ஓய்.சந்திரசூட், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார். நவ.,10 ல் அவர் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த வழக்கை புதிய அமர்வு விசாரணை நடத்தும். அடுத்து இந்த வழக்கு நவ.,17 ல் விசாரணைக்கு வர உள்ளது.இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தனது வாதத்தை முன்வைக்க நிறைவு செய்ய ஒரு நாள் முழுதும் தேவை என்றனர். இதே போல் மற்ற வழக்கறிஞர்களும் இதே கோரிக்கையை வைத்தனர். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் அவ்வாறே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subash BV
அக் 24, 2024 13:36

Better to resign immediately.


Balasubramanian
அக் 24, 2024 13:31

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே! நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே! சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது! தமிழ் நாட்டிற்கு புதியது அல்ல இது!


M S RAGHUNATHAN
அக் 24, 2024 11:27

If the conjugal relationship is denied then it can not be construed as a reason for divorce and on the same line adultery can also be not cited as a reason for divorce. The word ADULTERY should be removed from criminal dictionary.


M S RAGHUNATHAN
அக் 24, 2024 11:20

If physical relationship takes place between a wife and her husband without her consent is to be treated as martial rape, then adultery should be decriminalized. Will the advocate of the petitioner accept this and advise his client.


அப்பாவி
அக் 24, 2024 10:12

இன்னிக்கே ஓய்வெடுக்கலாம்.


J.V. Iyer
அக் 24, 2024 04:44

முதலில் வக்ப் போர்டுஐ ஒழியுங்கள். பிறகு எல்லோருக்கும் ஒரே சட்டம் கொண்டுவாருங்கள். மற்றவை எல்லாம் அவ்வளவு முக்கியமில்லை.


Kundalakesi
அக் 24, 2024 03:21

மனைவி விருப்பம் இல்லை என்று கூறினால் - கள்ள உறவு அல்லது சின்ன செட்டப் வைத்துக்கொள்ளலாம் என உத்தரவு போடுங்க எஜமான். அப்போ தான் கற்பழிப்பு ஒழியும். என் மனைவி அருகில் சென்றாலே முறைக்கிறார்


kulandai kannan
அக் 24, 2024 01:04

Emotionally and psychologically man and woman are not made for each other. In spite of this, the marriage system is continuing mainly because of sex. Without sex, what is the purpose of marriage?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 23:48

நாட்டிற்கு இது போன்ற வழக்குகள் முக்கியம் ....... அப்பதான் நாடு வல்லரசு ஆகும் .........


Skn
அக் 23, 2024 23:14

வெட்டியா டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.


சமீபத்திய செய்தி