உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு மோகம் என்ற புதிய நோய் : துணை ஜனாதிபதி கவலை

வெளிநாட்டு மோகம் என்ற புதிய நோய் : துணை ஜனாதிபதி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' நமது குழந்தைகளிடம் வெளிநாட்டு மோகம் என்ற புதிய நோய் பரவி வருகிறது,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் கல்வி நிறுவன விழாவில் அவர் பேசியதாவது: குழந்தைகள் மத்தியில் புதிய நோய் ஒன்று பரவி வருகிறது. அது வெளிநாட்டு மோகம். உற்சாகமாக வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். அதன் மூலம் புதிய கனவை காண விரும்புகின்றனர். ஆனால், எந்த நாடு, எந்த கல்வி நிறுவனம் என்பது குறித்து ஆராய்வது கிடையாது.நடப்பு 2024ம் ஆண்டு கணக்குப்படி 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், இந்தியாவில் படிக்கும்போது எவ்வளவு பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.மாணவர்கள் வெளிநாடு செல்வதால், அன்னிய செலாவணியில் 6 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை நமது கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புக்கு செலவு செய்தால், நாம் எங்கு இருப்போம்? வெளிநாட்டு சூழ்நிலை குறித்து, மாணவர்கள் தெரிந்து கொள்வது என்பது கல்வி நிறுவனங்களின் கடமையாகும்.கல்வியை வணிகமயமாக்குவது, நமது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு துணை ஜனாதிபதிஜக்தீப் தன்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RAAJ68
அக் 20, 2024 07:03

அம்பானி அதானி இவர்களை பார்த்து பொறாமைப்படும் சிலர் நீங்களும் ஏன் அம்பானி அதானியாக வருவதற்கு முயற்சி செய்யக் அவர்கள் என்ன பிறக்கும்போது தொழில் அதிபர்களாகவா வாழ பிறந்தார்கள்.


RAAJ68
அக் 20, 2024 07:00

நீங்கள் ஒருவர் இருப்பதையே மக்கள் மறந்து விட்டனர். இப்படி நடுநடுவே ஏதாவது அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு நீங்கள் இருப்பதை நினைவு படுத்துங்கள்.


முருகன்
அக் 20, 2024 05:02

ஆமாம் இவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்


தமிழன்
அக் 19, 2024 23:57

கேடுகெட்ட ஈ..பிறவி அரசியல்வாதிகளே மாதத்திற்கு 4 வெளிநாடு டூர் செல்லும் போது, சாதாரண மக்கள் போவதில் ஆச்சர்யமில்லை இங்கு நல்ல வேலை கிடைத்தால் எதற்கு வெளிநாட்டில் குப்பை கொட்டுகிறான்?? இவனுகள் ஆட்சி செய்யும் லட்சனம் அப்படி என்ன செய்வது??


அப்பாவி
அக் 19, 2024 23:51

தடுக்கி விழுந்தா அமெரிக்காவுல, ரஷ்யாவுலதான் விழறாரு. அங்கே போய்தான் இந்தியாவை முன்னேத்த முடியுமாம்.


சாண்டில்யன்
அக் 19, 2024 23:41

இங்கே அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சா வெளிநாட்டுக்கு ஏன் போறான்?


சாண்டில்யன்
அக் 19, 2024 23:39

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அவா போனா,இப்போன்னா கண்டவாளும் போறா அதான் இவருக்கு வேகுது அதான் குமுறுகிறார்


Priyan Vadanad
அக் 19, 2024 23:03

ஒன்றிய அரசு, மாணவர்கள் இங்கேயே படித்து சரியான வேலை கிடைத்து வாழ செய்தால் வெளிநாட்டு மோகம் ஏன் வருகிறது? அம்பானி அதானிகளுக்கு முறைசேவை செய்யவும், அவர்களுக்காக புதுப்புது வரிகள் போட்டு மக்களை வதைப்பதும்தானே இவர்களது அடிமைப்பணி. சாரி குடிமைப்பணி. சமீபத்திய united nation முறைப்பாடுகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.


Sakthi
அக் 19, 2024 23:56

அப்போ தமில்க திராவிட ஓங்கோல் அரசு என்ற ஒன்றை கலைத்து கவர்னர் ஆட்சி கொண்டு வந்து சாராய வியாபாரிகளை ஒழித்தால் ஒரு 10 வருடத்தில் நீங்கள் சொல்வது போல் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரும். என்ன கழக கொத்தடிமை... செய்து விடலாமா?


Kasimani Baskaran
அக் 20, 2024 07:51

ஹிந்தி படிக்க மாட்டோம். சமசீர் செய்வோம். தாய்மொழி படிக்க மாட்டோம். தேர்வு வேண்டாம்.


கிஜன்
அக் 19, 2024 22:48

அடுத்த தடவை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசிற்கு ஜி கட்சில நெறய போட்டி இருக்கும் போலயே ....


புதிய வீடியோ