உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க மங்கையை பின்னுக்கு தள்ளிய பாரா ஒலிம்பிக் வீரர்

தங்க மங்கையை பின்னுக்கு தள்ளிய பாரா ஒலிம்பிக் வீரர்

பெங்களூரை சேர்ந்தவர் சரத் கெய்க்வாட், 33. பிறக்கும் போதே, இடது கை குறைபாட்டுடன் பிறந்தார். லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியில் படித்தார். இப்பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.தங்கள் மகனை நீச்சல் பயிற்சிக்கு, அனுப்ப விருப்பமில்லை. சரத்திற்கு ஒன்பது வயதாகும் போது, நீச்சல் பயிற்சி மேற்கொண்டார். அதன் பின், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நீச்சல் போட்டியில் பங்கேற்று வந்தார்.பள்ளி ஒன்றில் நடந்த போட்டியில், சரத் கெய்க்வாட்டின் திறமையை கண்ட பயிற்சியாளர் ஜான் கிறிஸ்டோபர், சரத்திற்கு தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பயிற்சி அளித்தார். தனது வாழ்நாளில், பாரா ஒலிம்பிக் நீச்சல் வீரரான சரத்திற்கு பயிற்சி அளித்தார்.

அமர்க்களம்

l 2008ல் இந்தியா மற்றும் சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்றார். 2008 ல் ஐ.டபிள்யு.ஏ.எஸ்., வோர்ல்டு கேம்சில், நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் பதக்கம் பெற்றார்l 2010ல் சீனாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக் போட்டியில் வெண்கலம் வென்றார்l 2011ல் ஜெர்மனியின் பெர்லினில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் பதக்கம் பெற்றார்l இதன் மூலம், 2012ல் லண்டனில் நடந்த பாரா ஒலிம்பிக்கிற்கு தேர்வானார். இவர் தான் இந்திய சார்பில் தேர்வான முதல் பாரா ஒலிம்பிக் நீச்சல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கதுl 2014ல் தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், பல்வேறு பிரிவுகளில் ஆறு பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார்.

அதிக பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக பதக்கம் வென்ற பெருமையை பெற்றார்.l 1986ல் சியோலில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், 'தங்க மங்கை' என அழைக்கப்படும் பி.டி.உஷா, ஐந்து பதக்கங்கள் பெற்றதே சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை சரத் கெய்க்வாட் முறியடித்துள்ளார்.l 2014க்கு பின், ஓய்வு பெற்ற சரத், மாநில, தேசிய அளவிலான நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பலர், பல பதக்கங்கள் பெற்று வருகின்றனர்.தற்போது பெங்களூரில் உள்ள 'ஜீ ஸ்விம் அகாடமி' இயக்குனராக உள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி