உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டத்தில் கோஷ்டி கானம்; பயந்து பின்வாங்கியது காங்கிரஸ்

போராட்டத்தில் கோஷ்டி கானம்; பயந்து பின்வாங்கியது காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓட்டு திருட்டால், பா.ஜ., வெற்றி பெற்றது' என, காங்கிரசின் ராகுல் புகார் எழுப்பியுள்ளதோடு, இது தொடர்பாக போராட்டமும் நடத்தி வருகிறார்; இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதனிடையே, 'காங்கிரஸ் தான் ஓட்டு திருட்டு நடத்தியுள்ளது' என, பா.ஜ.. எதிர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. கர்நாடக அமைச்சராக இருந்த ராஜண்ணா, 'இந்த ஓட்டு திருட்டு விவகாரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஈடுபட்டது' என கூறியுள்ளார்; இதனால் இவரது அமைச்சர் பதவி பறிபோனது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0wwdtpyp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் ஆணையம், இண்டி கூட்டணி தலைவர் களை நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தது. அதிக பட்சமாக, 30 பேர் அடங்கிய குழு வர அனுமதி அளித்தது. ஆணையம்.'சந்திக்க வருகிறோம்' என, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப் பினார்; விரைவில் யார் யார் பங்கேற் பர் என்ற பட்டியலை அனுப்புவதாக வும் கூறினார் ஜெய்ராம் ரமேஷ்.ஆனால், கடைசி வரை அந்த பட்டி யல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப் பப்படவே இல்லை; இதனால் தேர்தல் ஆணையம் -இண்டி கூட்டணி கூட் டம் நடைபெறவே இல்லை.காங்கிரசுக்குள் பல கோஷ்டிகள். இந்த கோஷ்டி தலைவர்கள், தாங் களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க விருப்பப்பட்டனர். கூட்டணி கட்சியினரும், அதிக அளவில் இந்த பட்டிய லில் இடம் பெற விரும்பினர். குறிப்பாக, தி.மு.க.,விலிருந்து கனிமொழி கோஷ்டி, உதயநிதி கோஷ்டி எம்.பி.,க்களும் குழுவில் இருக்க வேண்டும் என, காங்கிரசிடம் கூறினராம். மற்ற கூட்டணி கட்சிகளும் பெரிய பட்டியலை காங்கிரசுக்கு அளித்ததாம்.'இப்படி அனைத்து கோஷ்டியினரையும் சேர்த்துக் கொண்டு போனால், 50 பேருக்கு மேல் ஆகிவிடும். எதற்கு வீண் பிரச்னை... தேர்தல் ஆணைய சந்திப்பே வேண்டாம்; தெருவில் இறங்கி போராடுவோம்' என சொல்லிவிட்டாராம் ராகுல். இப்படி கோஷ்டி கானத்தால், தேர்தல் ஆணையத்தை சந்திக்காமலேயே இருந்துவிட்டது, இண்டி கூட்டணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ManiMurugan Murugan
ஆக 17, 2025 23:13

மஹாராஷ்டிராவில் முறைக்கேடு என்றால் அங்கு தானே போராட்டம் நடத்த வேண்டும் பொ ஹாரி ல் எதற்கு அப்படி என்றால் நீக்கப் பட்ட பெயர்கள் எல்லாம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் விளம்பர மோக தி மு கா கூட்டணி தமிழகத்தில் செய்தது ப் போல் பிஹாரில் காங்கிரஸ் சேர்த்து உள்ளது என்பதே உணடமை


Sakshi
ஆக 17, 2025 17:42

2006 திருமங்கலம் போல் ரிசல்ட் எடுத்தா தெறிஞ்சுடும்


S.V.Srinivasan
ஆக 17, 2025 15:33

ராகுலார்க்கு பொழுது போகல . எதோ உளறிக்கிட்டு திரியாராரு . தேர்தல் கமிஷன் விவகாரமும் அதை போல்தான். தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்டது. கொடுக்க முடியவில்லை அதனால் இந்த சால்ஜாப்பு. காங்கிரஸ் விளங்கிடும்.


kannan
ஆக 17, 2025 14:36

எப்ப CCTV வீடியோவை, வாக்காளர் பட்டியல் கம்ப்யூட்டர் மூலம் சரிபார்க்க முடியும் படி தர மறுத்து திடீரென விதியை மாற்றும் போதே எங்கப்பன் குதிர்குள்ளே இல்லை என்று சொல்வது போல் உள்ளது. நேர்மையற்ற ஊடகங்கள் எதை உண்கிறார்கள்?


vivek
ஆக 17, 2025 16:36

அறிவிலி கண்ணன்....பொய்யான தகவல் கொடுத்தால் ஏழு வருஷம் உள்ளே போகணும்...வரியா


M Ramachandran
ஆக 17, 2025 14:27

தான் திருடி பிரதியானய்ய்ய திருடன் என்று தானென கூறுவான்.அதைய கேட்டுக்கு சில கூறு கெட்ட ஜென்மங்கள் பஞ்சத்திற்கு ஆண்டியாகவுடன் உடன் கூட செல்லக்கூடும்.


Ambika. K
ஆக 17, 2025 12:39

அதெல்லாம் ஒன்னும் இல்லை. இது முழுவதுமே பொய் குற்ற சாட்டு. ஆரோ ஆதாரமும் இல்லை புண்ணாக்கும் இல்லை. தேர்தல் ஆணையம் ஆதாரம் கேட்கும் ஆதாரம் சரி இல்லை என்றால் நிராகரித்துவிடும். எதற்கு வம்பு கோஷ்டி சண்டை என்றால் உலகமே நம்பி விடும். பாவம் ஜெயராம் ரமேஷ் ஏன் வருகிறோம் தேர்தல் ஆணையத்தை சந்திக்கிறோம் என்று சொன்னதிற்க்காக கட்சியை விட்டு துரத்தி விடாமல் இருந்தால் சரி.


Sambath
ஆக 17, 2025 12:31

துரோகி கோஷ்டிகள்


Nagarajan D
ஆக 17, 2025 12:19

அந்த காந்தி முதல் இந்த காந்தி வரை எல்லா காந்திகளும் தேசத்திற்கு எதிராகவே இருக்காங்க


Kumar Kumzi
ஆக 17, 2025 10:55

அட பாவத்தே ஓங்கோல் துண்டுசீட்டு கோஷ்டி தூங்குறீங்களா


Kumar Kumzi
ஆக 17, 2025 09:54

வேலை வெட்டி இல்லாமல் நாட்டை சீரழிக்க நினைக்கும் இந்த துரோகியை சிறையில் அடையுங்கள்


சமீபத்திய செய்தி