மாணவர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா மேடை
பெங்களூரு: பெங்களூரு புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று தமிழ் மொழி திறன் போட்டிகள் நடந்தன. 10 பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நாட்டுப்புற பாடல்களுக்கு நடனமாடும்போது மாணவர்கள் ஆரவாரம் எழுப்பியதால் விழா மேடை அதிர்ந்தது.கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், பெங்களூரு சிவாஜி நகர் அம்பேத்கர் வீதியில் உள்ள, தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் வளாகத்தில் தமிழ் புத்தக திருவிழா நடந்து வருகிறது.இரண்டாவது நாளான நேற்று பள்ளி மாணவர்களுக்கான, தமிழ் மொழித்திறன் போட்டிகள் நடந்தன.இந்த போட்டிகளில் மாருதிசேவா நகர், என்.எஸ்.நகர், கிளைவ்லேண்ட் டவுன், காக்ஸ் டவுன் பகுதிகளில் உள்ள தமிழ் அரசு பள்ளிகள், ஹொரமாவு வேல்ஸ் குளோபல் பள்ளி, ஹலசூரின் ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கோவிந்தம்மாள் பள்ளி, தியாகராஜநகரின் எஸ்.வி.சி.கே., பள்ளி, ஹெச்.ஏ.எல்., விமானபுராவின் தெய்வானையம்மாள் தமிழ் உயர்நிலைப் பள்ளி, செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., உயர்நிலைப் பள்ளி, மட்டதஹள்ளி என்.எஸ்., லைனில் உள்ள ஜி.டி.ஏ.,ஹெச்.பி.எஸ்., பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர். அறிவுடைமை
அன்புடைமை, அறிவுடைமை என்ற குறளதிகாரம் ஒப்புவிக்கும் போட்டியில் 51 பேர் கலந்து கொண்டனர். கதை சொல்லுதல் போட்டியில் 26 பேர் கலந்து கொண்டனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: ஐ.டி.ஐ., வித்தியா மந்திர் பள்ளியின், ஐந்தாம் வகுப்பு மாணவி பிளஸ்சி ஏஞ்சலினா முதல் பரிசு; ஜி.டி.ஏ.,ஹெச்.பி.எஸ். பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி தீக் ஷிதா 2வது பரிசு; தெய்வானையம்மாள் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவி ஆவ் மரியா மூன்றாவது பரிசம் பெற்றனர்.கதை சொல்லுதல் போட்டி: தெய்வானையம்மாள் பள்ளியின் 7ம் வகுப்பு மாணவன் செல்வக்கண்ணன் முதல் பரிசு; வேல்ஸ் குளோபல் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன் தருண் கார்த்திக் 2வது பரிசு, ஐ.டி.ஐ., வித்யா மந்திர் பள்ளியின் மாணவி ஐன்ஸ்டினா மூன்றாவது பரிசும் பெற்றனர். மாறுவேட போட்டி
நாட்டுப்புற பாடல்களுக்கு குழு நடனம்: வேல்ஸ் குளோபல் பள்ளி முதல் பரிசு; எஸ்.வி.சி. கே., பள்ளி 2வது பரிசு; செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்., பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றனர்.தங்கள் பள்ளிகளின் மாணவர்கள் மேடையில் ஏறி நடனமாடும்போது சக மாணவர்கள் கைதட்டியும், கோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். இதனால் விழா மேடையே அதிர்ந்தது. மாணவர்களின் நடனத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.மாறு வேட போட்டியில் ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பள்ளியின் குமரன் என்ற மாணவர் பாரதியார், நிஷாந்த் என்ற மாணவர் அழ வள்ளியப்பா, விஸ்வநாத் என்ற மாணவர் பாரதியார், லக் ஷன் என்ற மாணவர் நாமக்கல் கவிஞர், அஜய் என்ற மாணவர் பாரதியார், வினோதினி என்ற மாணவி வேலு நாச்சியார், சாய் தனுஷ் என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, சுஷ்மிதா என்ற மனைவி அவ்வையார் வேடம் அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.இதை தொடர்ந்து சிறந்த தமிழ்நுால்கள் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், கர்நாடக தொழில் துறை முதன்மை செயலருமான செல்வகுமார் கவுரவித்தார்.பின், தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தும் தமிழர் தொன்மை என்ற தலைப்பில் இலக்கிய மாலை நடந்தது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, பண்டைய நாகரீகம், சிந்து சமவெளி, மொகஞ்சதோரோ, கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரியும், கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., முருகன் கலந்து கொண்டார்.அமர்நாத் ராமகிருஷ்ணன், முருகனுக்கு தினமலர் நாளிதழ் சார்பில், 'சோழர்கள் இன்று' என்ற புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.பட விளக்கங்கள்22 12 2024 blr ph 1'தாமரை பிரதர்ஸ்' பதிப்பக புத்தகத்தை ஆர்வமாக பார்த்த, கூடுதல் டி.ஜி.பி., முருகன்.22 12 2024 blr ph 2சிறந்த தமிழ்நுால் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள், ஐ.ஏ.எஸ்., செல்வகுமாருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.22 12 2024 blr ph 3புத்தக திருவிழாவில் இடம்பெற்றுள்ள, தாமரை பிரதர்ஸ் புத்தக அரங்கில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்த்த, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.22 12 2024 blr ph 4தமிழ் புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட ஐ.டி.ஐ., வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள்.22 12 2024 blr ph 5தமிழ் புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற தெய்வானையம்மாள் தமிழ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.22 12 2024 blr ph 6புத்தக திருவிழாவில் குழந்தையுடன் பங்கேற்ற தம்பதி.