உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசே இறுதியானது!

அரசே இறுதியானது!

ஜனநாயகத்தில் ஆட்சி நிர்வாகம் என்பது அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும். நீதிமன்றங்களிடம் இருக்க முடியாது. அரசு பார்லிமென்டிற்கும், அதன் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் மக்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. அரசை தாண்டிய நிர்வாகம் இருக்கக் கூடாது. அரசே இறுதியானது. ஜக்தீப் தன்கர்துணை ஜனாதிபதி

தலைவர் தேர்வில் தாமதம்!

உலகின் மிகப்பெரிய கட்சி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பா.ஜ.,வால் இதுவரை தங்களுக்கான தேசியத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த தடுமாற்றம், பா.ஜ.,வின் உட்கட்சி ஜனநாயகம் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது. இது, மக்களுக்கு சேவை செய்யும் கட்சியல்ல; அதிகாரத்தை மட்டுமே விரும்பும் கட்சி.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி

நேரம் பிடிக்கும்!

நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளிலும், அவர்களின்தேசியத் தலைவர்கள் குடும்ப வாரிசு என்ற ஒரே அடிப்படையில் அந்த பதவிக்கு வந்தவர்கள். ஆனால், பா.ஜ.,வில் கட்சியின் 12 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேசியத் தலைவராக தேர்வு செய்கிறோம். அதனால் நேரம் பிடிக்கும்.அமித் ஷாமத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thirumal s S
ஏப் 03, 2025 13:31

இந்த ஆளு மாநிலத்தில் கவர்னராக இருந்த போது என்ன செய்தார். இப்போ என்ன செய்கிறார். மத்திய ஆளுங்கட்சிக்கு பூஜை செய்கிறார். ஒரு அரசுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கனும்னு .


மூர்க்கன்
ஏப் 03, 2025 14:21

கூஜா தூக்கினால் இவ்வளவு பதவிகளா?? அதிகார திமிர் கூடாது... மூக்கணாங்கயிறு அவசியம் இந்த தறிகெட்ட அரசுக்கு??


Dharmavaan
ஏப் 03, 2025 07:45

மிகவும் துணிச்சலான துணை ஜனாதிபதி உண்மையை பேசுகிறார். மக்கள் பார்லிமெண்டுக்குத்தான் அதிகாரம் கொடுத்துள்ளனர் .ஆகவே நாட்டின் எல்லா துறைகளும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் நீதித்துறை உட்பட நீதி வரம்பு மீறுகிறது அடக்க வேண்டும்


R.RAMACHANDRAN
ஏப் 03, 2025 07:44

அரசு என்பது மூன்று அங்கங்களும் உள்ளடக்கியது ஆகும்.மூன்று அங்கங்களிலும் குற்றவாளிகள் ஊடுருவி உள்ளதால் நேர்மையான சேவை இல்லை.லஞ்சத்திற்காக எதையும் செய்கின்றனர்.