உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலையில் கல்லை போட்டு நண்பரை கொன்ற வாலிபர்

தலையில் கல்லை போட்டு நண்பரை கொன்ற வாலிபர்

சஞ்சய்நகர்: காதல் விவகாரத்தில் நண்பரை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.உடுப்பியைச் சேர்ந்தவர்கள் திவேஷ், 25, வருண், 25. இவர்கள் இருவரும் நண்பர்கள். பெங்களூரு சஞ்சய் நகர் கெத்தலஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்து, வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.இந்நிலையில் திவேஷும், ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி சந்தித்தனர். காதலியை சந்திக்கச் செல்லும்போது, வருணையும் தன்னுடன் திவேஷ் அழைத்துச் சென்றுள்ளார்.நாளடைவில் வருணுக்கும், திவேஷின் காதலிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்க துவங்கினர். இது பற்றி திவேஷுக்கு தெரிந்தது. காதலை கைவிடும்படி வருணை எச்சரித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை.நேற்று காலை 7:00 மணியளவில் வீட்டின் முன் வைத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வருணை பிடித்து கீழே தள்ளிய திவேஷ், கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து வருண் தலையில் போட்டார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த சஞ்சய் நகர் போலீசார், திவேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை