உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருந்திய மாயாவதி!

திருந்திய மாயாவதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திரிணமுல் காங்., கட்சி இரண்டாக உடைந்து, இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டார் மம்தா பானர்ஜி. கட்சிக்குள் பிளவு உண்டாக காரணம், அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி. இதை பார்த்து பாடம் கற்றுக் கொண்டார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. தன் தம்பி மகனான ஆகாஷ் ஆனந்தை தான், தன் அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார் மாயாவதி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், மாயாவதி கட்சியின் வேட்பாளர்களை, 'ஆகாஷ் தான் முடிவு செய்வார்' என, ஒரு செய்தி பரவி விட்டது. இதனால், கட்சி தலைவர்கள் பலரும் மாயாவதியை கண்டு கொள்ளாமல், ஆகாஷிடம் சென்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0chykjlu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை பார்த்த மாயாவதி, மம்தாவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் வரக்கூடாது என முடிவு செய்து, 'உ.பி., சட்டசபை வேட்பாளர்களை நான் முடிவு செய்வேன். ஆகாஷ் வெறும் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே' என அறிவித்தார். அது மட்டுமல்லாமல், 'பொதுக்கூட்டங்களில் பேசுவது, கூட்டங்களை ஒருங்கிணைப்பது மட்டுமே ஆகாஷின் வேலை' என்றும் கறாராக சொல்லி விட்டார்.கடந்த 2022ல் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில், ஒரே தொகுதியில் மட்டுமே வென்ற பகுஜன் சமாஜ், பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பெற்றது. 'இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும்' என, தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ள மாயாவதி, இந்த மாதத்திலேயே வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார். மாயாவதி தனித்து போட்டியிட்டால், பா.ஜ.,விற்கு லாபம். எனவே, இதை தடுத்து காங்., கூட்டணியில் மாயாவதியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராகுல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஆக 02, 2026 13:30

மமதா மாயா... அதாவது காணாமல் போய்விட்டார். மாயாவதி... அவரும் எப்பவோ மாயா.. எப்பவோ காணாமல் போய்விட்டார். யோகிஜியை எதிர்த்து இனி அவரால் அந்த மாநிலத்தில் தலை தூக்க முடியவே முடியாது.


Modisha
ஆக 02, 2026 08:45

Wrong diagnosis and wrong treatment. Her popularity is a thing of the past.


Aam Aathmi (Mango Man)
ஆக 02, 2026 08:09

மாயாவதியும் ராகுலும் கூட்டணி அமைக்க வேண்டும்


sankaranarayanan
ஆக 02, 2026 08:02

ஊருக்கு ஊர் அரசியல் வாதிகளின் சிலைகளை வைத்தே திராவிட மாடல் அரசு முடங்கிற்று அதேபோன்று மாயாவதி அவரது ஆட்சியில் ஊருக்கு ஊர் யானை சிலைகளை அமைத்தது அரசே முடங்கிப்போயிற்று இரண்டும் சிலைகளினால் அரசே அழிந்தது


Ganesun Iyer
ஆக 02, 2026 07:34

நல்ல வேலை ஸ்டாலினுக்கு மச்சான் தொல்லை இல்லை.. மகனே எல்லாத்தையும் முடிச்சி வைப்பார்..


Kalyanaraman Subramaniam
ஆக 02, 2026 08:00

அதான் மாப்ள இருக்காரே, போறாதா? மாப்பிளையும், மகனும் சேர்ந்தா deadly cocktail தான்


Palanisamy Sekar
ஆக 02, 2026 07:16

மாயாவதி கட்சியில் இருந்த இளைஞர்கள் பட்டாளம் இப்போது யோகியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள். ஒத்த சீட்டு என்கிற நிலையில் இனி மாயாவதிக்கு அந்த ஒத்த சீட்டும் காணாமல் போகும் என்கிறது அங்கிருந்துவரும் செய்திகள். இங்கே திருமாவின் நிலைமைதான் அங்கிருக்கும் மாயாவதியின் நிலைமையும். சாதிவாரி கட்சிகள் இந்த ஜென்சி உலகில் வெல்ல முடியாது.


SUBBU,MADURAI
ஆக 02, 2026 07:12

உத்தரப் பிரதேசத்தில் கடந்த தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தோல்வியைச் சந்தித்ததற்கு முக்கிய காரணம் கூட்டணி விஷயத்தில் அவர் எடுத்த தவறான முடிவுதான். மேலும் தலித் சமூகத்தினரின் வாக்குகளை மட்டும் நம்பியிருந்த இவரின் கட்சியில், ஜாதவ் அல்லாத மற்ற இதர தாழ்த்தப்பட்ட மக்கள் பாஜக பக்கம் திரும்பினர். அதுபோக மாயாவதியின் கட்சித் தொண்டர்களே கூட அவரது அராஜக அரசியல்போக்கு பிடிக்காமல் பாதி பேர் பாஜகவில் ஐக்கியமாகினர். தேர்தலின் போது பாஜக நல்லாட்சி கொடுப்போம் என்ற வாக்குறுதி மற்றும் அவர்கள் கூறிய நலத்திட்டங்கள் அங்குள்ள பெரும்பாலான தலித் மக்களை ஈர்த்தது. அந்த ஈர்ப்பு மாயாவதியின் மேல் வெறுப்பாக மாறியது. மேலும் அவர் முதல்வராக இருந்தபோது, லக்னோ மற்றும் நொய்டா போன்ற முக்கிய நகரங்களில் தனது கட்சியின் சின்னமான யானை சிலைகளையும், தனது சிலைகளையும் ₹50 கோடிகளுக்கும் மேல் அரசுப் பணத்தில் அதிக எண்ணிக்கையில் நிறுவினார். இதெல்லாம் பார்த்து கொதித்துப்போன மக்கள் அத்துடன் மாயாவதியின் ஆட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டார்கள். எனவே இவர் மீண்டும் உபியில் முதல்வராவதெல்லாம் கனவிலும் கூட நடக்காது.


Barakat Ali
ஆக 02, 2026 07:02

இப்போ மாயாவுக்கு மட்டும் என்ன மவுசு இருக்கு ??


ஆரூர் ரங்
ஆக 02, 2026 06:54

கட்சிக்கும் சசிக்கும் எவ்விதமான தொடர்பு மில்லை. நான்தான் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறேன் என்றார் ஜெயா. உண்மைதான். சசி யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. நடராஜன்தான் பட்டியலை முடிவு செய்தார்.


SUBBU,MADURAI
ஆக 02, 2026 06:02

மேற்கு வங்கத்தில் கடந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய காட்டாட்சியில் நடந்த அட்டூழியம் மற்றும் அராஜகம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். சிறுபான்மையினர் (முஸ்லிம்) நலனுக்காக ₹5700 கோடியை ஒதுக்கிய மம்தா இந்துக்கள் அதிகமாக வசிக்கும் வட வங்காளத்திற்கு வெறும் ₹800 கோடியை மட்டும் ஒதுக்கினார். அதேபோல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு வெறும் ₹80 கோடியையும்,தொழில்துறை உற்பத்தி 30% சதவீதத்தில் இருந்து வெறும் 3% சதவீதமாகவும் குறைத்து விட்டார். நாற்பது லட்சம் இளைஞர்கள் மேற்குவங்க மாநிலத்தை விட்டு வெளியேறினர். இந்தியாவிலேயே ஆசிட்வீச்சு தாக்குதல் வழக்குகளில் 28% சதவீதம் வங்காளத்தில்தான் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், மாநிலத்தில் முன்னுரிமைகள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை பாஜக பெங்கால் மக்களிடம் எழுப்பியதன் விளைவு மேற்குவங்கத்தில் பதினைந்து ஆண்டுகள் நடந்துவந்த மம்தாவின் Jungle Raj ஆட்சி முடிவுக்கு வந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை