உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பென்சன் திட்டம் பெயரில் இருக்கும் யுவுக்கு அர்த்தம் இதுதான் என்கிறார் காங்., தலைவர் கார்கே!

பென்சன் திட்டம் பெயரில் இருக்கும் யுவுக்கு அர்த்தம் இதுதான் என்கிறார் காங்., தலைவர் கார்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியின் ஆட்சியிடம் இருந்து 140 கோடி இந்தியர்களை பாதுகாப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவர். 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியிடம் இருந்து 140 கோடி இந்தியர்களை பாதுகாப்போம். இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஜூன் 4ம் தேதியன்று வெளியான முடிவுகள், மத்திய அரசின் அதிகாரத்தை வென்று விட்டன,'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Swami K
ஆக 25, 2024 21:13

யாரை சொல்கிறீர்கள். முடிவுகளை அறிவித்து விட்டு பின்னங்கால் பிடரியில் பட வாபஸ் ஆவதையா? மக்கள் போட்ட லகான் நல்லா வேலை பாக்குது. ஆனாலும் குதிரை திமிருது


M Ramachandran
ஆக 25, 2024 20:12

சுய புத்தியும் கிடையாது. சொந்த மாகா நிநைய்யகும் திறனும் கிடையாது. கேட்க்கும் கேள்விக்கு பதில் கிடைய்யது மூக்கறு பட்டவுடன் வால் அருந்த நரி போல ஊள்ளையிடுவது தான் வழக்கம்.


பேசும் தமிழன்
ஆக 25, 2024 17:15

ஊழல் மூலம் கொள்ளை அடித்த உங்களிடம் இருந்து நாட்டையும்.... 140 கோடி இந்திய மக்களையும் காப்பாற்றியது பிஜெபி கட்சி தான்.... இல்லையென்றால் இந்நேரம் நாட்டை பாகிஸ்தான் அல்லது சீனா நாட்டிடம் அடகு வைத்து இருப்பீர்கள்.


Swami K
ஆக 25, 2024 21:15

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தியும் நாட்டை காப்பாற்ற சொல்லுங்க


M Ramachandran
ஆக 26, 2024 13:04

முற்றிலும் உண்மை.


Rajarajan
ஆக 25, 2024 16:53

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கையெழுத்து இட்டுவிட்டு, தற்போது தனியார்மயத்தை எதிர்ப்பது எப்படி ?? அரசு ஆள மட்டுமே வேண்டும், வியாபாரம் செய்ய கூடாது என்று முழங்கிவிட்டு, அரசுத்துறை / பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது என காங்கிரஸ் கூறுவது எப்படி ? சரிப்பா. நஷ்டத்தில் இயங்கும் அரசுத்துறை / பொதுத்துறை நிறுவனங்களை, காங்கிரஸ் வாங்கிக்கொண்டு தானே நடத்தட்டும். ஆட்சேபனை இல்லை.


Swami K
ஆக 25, 2024 21:17

லாபம் கிடைக்கும் நிறுவனங்களை நாங்க பங்கு விற்பனை செய்ய மாட்டோம் என்று பாஜக வை அறிவிக்க சொல்லுங்க.


ஆரூர் ரங்
ஆக 25, 2024 15:29

நீங்க கொண்டு வந்து அமல்படுத்திய நீட் தேர்வை நீங்களே எதிர்த்து யு டர்ன் அடிக்கிறீங்க. தபால் ஓட்டுக் கேட்பு மசோதாவை ராஜிவ் வாபஸ் பெற்றார். இலங்கைக்கு அனுப்பிய IPKF அமைதிப் படையை 1400 வீரர்களை பறிகொடுத்த பின்னர் அவரே யு டர்ன் அடித்து வாபஸ் பெற்றார். அதற்குமுன் தான் கொண்டு வந்த அவசரநிலையை வாபஸ் பெற்ற பிறகே இந்திரா பதவி விலகினார். நேரு காலத்திலிருந்து அடித்த ஏராள அந்தர் பல்டிகளை எழுத இங்கே இடம் போதாது.


Swami K
ஆக 25, 2024 21:20

பழைய லிஸ்ட் எல்லாம் சரி. புது லிஸ்டையும் சேர்த்துப் போடுங்க. வாபஸ் ஆவது தப்பில்ல. ஆனா 2014 - 2024 வாபசே எங்க அகராதியில் கிடையாதுன்னு அகராதியா இருந்தீங்கல்ல அதுதான் தப்பு. அதனால் லிஸ்ட் நீளட்டும்


ஆரூர் ரங்
ஆக 25, 2024 15:22

உங்க சொந்த மாநிலத்திலே கன்னடர்களுக்கான கட்டாய இடஒதுக்கீட்டை சித்தராமையா வாபஸ் வாங்கியது யு டர்ன் இல்லையா?.


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 15:09

உன்னைப்போன்ற இந்திய விரோத காங்கிரஸ் வைரஸ் களிடம் இருந்து இந்தியாவை எத்துணை மோடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பதனை கர்நாடகாவில் வாழ்ந்து வரும் மக்கள் இப்போது உணர்ந்துள்ளார்கள் காருகே


Senthil
ஆக 25, 2024 15:46

உங்களைப் போன்ற பாஜக இருந்து எத்தனை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பதனை இந்தியா முழுவதும் வாழ்கின்ற மக்கள் உணர்ந்துள்ளனர் நிக்கோல்


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 16:31

இயற்கையை அழித்து கடவுளரை நம்பிக்கொண்டிருக்கும் நீங்க உங்க குடும்பத்தில் , சொந்தத்தில் பெண்கள் யாரவது அரசு வேளையில் இருந்தா அதனை எப்படி பெற்றனர் என்று கூருங்க , கண்டிப்பா கார்கே மகன் கூறியபடி அரசு வேலை பெற்றிருக்க வாய்ப்பில்லை ராசா


Ram
ஆக 25, 2024 15:07

சரியாக சொல்லியிருக்கார்


Nava
ஆக 25, 2024 14:36

முட்டாள்கள் உலகத்தில் வாழும் கான்கிரஸ் மேதையின் உளறல்கள் அளவு கடந்து சென்று கொண்டு இருக்கிறது


Senthil
ஆக 25, 2024 15:47

சரியாக கூறினீர்கள். இது முட்டாள்களின் உலகம் தான். ????


A Viswanathan
ஆக 25, 2024 14:18

இவரை பார்த்தால் சிரிப்பு தான் வருது.இவர் அரசியலில் ஒரு கிணற்று தவளை.


Swami K
ஆக 25, 2024 21:23

மழை நேரத்து தவளை சத்தம் தூங்க விடாது. தேர்தலுக்குப் பிந்தைய காலம் அப்படித்தான். பாஜக அரசாங்கத்தின் தூக்கம் போச்சு.


முக்கிய வீடியோ