உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் முதன்மையான நாடு: இளைஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு

உலகின் முதன்மையான நாடு: இளைஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு

கோத்ரா: 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து துறைகளிலும் இந்தியாவை முதன்மையான நாடாக உருவாக்க, இளைஞர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா அருகே உள்ள வின்சோலில் உள்ள ஸ்ரீ கோவிந்த் குரு பல்கலைக்கழகத்திற்கான ரூ.125 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார்.அமித் ஷா பேசியதாவது:2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினத் தலைவர் கோவிந்த் குருவின் பங்களிப்பு மகத்தானது. அவரை இங்கு நினைவு கொள்கிறேன். பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது இப்பகுதியை சேர்ந்த மக்களை விழிப்புணர்வு செய்ததில் கோவிந்த் குரு சிறந்த பங்காற்றினார்.அவர் பங்காற்றிய பகுதியில் உள்ள நீங்கள், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய எதிர்கால துறைகளில் தேர்ச்சி பெறுங்கள். இந்திய தாயாரிப்புக்களை வாங்குவதன் மூலம் பொருளாதாரத்தை பலப்படுத்துங்கள்.ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கொள்கையை பின்பற்றுங்கள்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijay D Ratnam
ஜூன் 29, 2025 00:32

ஆமாங்க இளைஞர்கள் எப்படி முன்னேற்றம் அடைகிறார்கள் பாருங்கள் அமித்ஷா மவன் ஜெய் ஷா என்ன தொழில் செய்கிறார் என்று பி.ஜே.பி-யின் முன்னணி நிர்வாகிகள் பலரும் அறியாத நேரத்தில், அவரது தொழில் பற்றி விவரங்களை ஓர் இணையதளம் துப்புதுலக்க ஆரம்பித்தது. அப்போது டெம்பிள் என்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தில் ஜெய் ஷா பங்குதாரராக இருக்கிறார் என்பதைக் கண்டறிந்தனர். அதன்பிறகு, அந்த நிறுவனத்தின் வருமானங்களை ஆராய்ந்தது. அந்த நிறுவனத்தின் வர்த்தகம். 2014-15-ம் நிதி ஆண்டில் 50,000 ரூபாயாக இருந்தநிலையில், அடுத்த ஒரே ஆண்டில் 2015-16-ம் ஆண்டில் 16,000 மடங்கு அதிகரித்து 80.5 கோடிக்கு த்து மதிப்பு அதிகரித்தது எப்படி என அந்த ஆங்கில இணையதளம் பரபரப்பு குற்றச்சாட்டை 2017-ம் ஆண்டு கிளப்பியது. அந்த நிறுவனத்திற்கு எந்த அசையா சொத்தும் இல்லை. முதலீடும் இல்லை என்கிற நிலையில் எப்படி இது சாத்தியம் என்று கேள்வியும் எழுப்பினார்கள் எதிர்க்கட்சியினர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜெய் ஷாவின் பெயர் ஊடகங்களில் அதிகம் அடிபடத் தொடங்கியது. ஜெய் ஷா. உலக விளையாட்டு அமைப்புகளிலேயே வளமான அமைப்பாகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய செயலாளராக எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை