உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்போ டிரம்... இப்போ டிராலி சூட்கேஸ்; கணவனை கொலை செய்த மனைவி

அப்போ டிரம்... இப்போ டிராலி சூட்கேஸ்; கணவனை கொலை செய்த மனைவி

கான்பூர்: துபாயில் இருந்து வந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை டிராலி சூட்கேஸில் போட்டு வைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் உத்தரபிரதேசம் மீரட்டில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டி, தண்ணீர் டிரம்மில் போட்டு அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s8hfq1a5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் அதேபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள பத்தௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவ்ஷத்,37, என்பவர் துபாயில் பணியாற்றி வரும் நிலையில், 10 நாட்களுக்கு முன்புசொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள கோதுமை விவசாய நிலத்தில், டிராலி சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சூட்கேஸில் இருந்த பாஸ்போர்ட்டை வைத்தே இவர் பற்றிய தகவலை போலீசார் உறுதி செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நவ்ஷாத் மனைவிக்கும், அவரது உறவினருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த காரணத்தினால், கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்து உடலை டிராலி சூட்கேஸில் வைத்து, 60 கி.மீ., தள்ளி கொண்டு வந்து போட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் மனைவியை கைது செய்த போலீசார், தப்பியோடிய கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல, பேரெய்லி பகுதியில் 35 வயதுடைய தூய்மை பணியாளரை, அவரது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Matt P
ஏப் 22, 2025 20:42

கள்ளக்காதல் மகிழ்வு,வாழ்க்கையை சுக்கு நூறாக்கி விடும். பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை இனி வரும் காலங்களிலாவது அறிந்தால் சரி.என்றைக்கோ மனிதன் எப்படி எப்படியோ வாழ்ந்தான். வரைமுறை தேவை மனித நிம்மதிக்கு என்பதால் கலாச்சாரம் மாறியிருக்கிறது. நிகழ்கால சுகத்துக்காக வருங்கால நிம்மதியை இழக்கிறார்கள்.


Chandra
ஏப் 22, 2025 14:51

வாழ்க உத்தரபிரதேசம் ..


Nandakumar Naidu.
ஏப் 22, 2025 14:22

அந்தக் காலத்தில் எழுதப்பட்ட வாக்கியமானது "கொலையும் செய்வாள் பத்தினி". அது இப்போது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.


JayaSeeli
ஏப் 22, 2025 13:51

அப்படீன்னா இனிமே சூட்கேசை விக்க தடை போடுவீர்களா ?


m.arunachalam
ஏப் 22, 2025 13:10

இதை வெளியில் தெரியாமல் மிக கடுமையாக பழுக்க காய்ச்சிய இரும்பு கொண்டு கையாள வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை