உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  எந்த பிளவும் இல்லை!

 எந்த பிளவும் இல்லை!

'இண்டி' கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், கூட்டணியில் இருந்து தி.மு.க., சற்று விலகி உள்ளதே தவிர, வெளியேறவில்லை. அதற்கு மாற்றாக, தமிழக முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் இணைந்துள்ளது. சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., - உத்தவ் சிவசேனா தரப்பு

டெண்டரில் முறைகேடு!

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 விடைத்தாள் ஆன்லைன் மதிப்பீட்டு முறையை மேற்கொண்ட, 'கோம்ப்ட்' நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. முந்தைய இரண்டு டெண்டர்களில், 28 கோடி ரூபாயாக இருந்த மதிப்பு, தற்போது, 38 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்

நிதிநிலைமை மோசம்!

கேரளாவில், 10 ஆண்டு கால இடதுசாரி ஆட்சியில், மாநிலத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமடைந்து உள்ளது. மூலதன செலவு வெறும், 1 சதவீதமாக குறைந்துள்ளது. புதிய முதலீடுகள் இல்லாததால், மாநிலம் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. முதலீட்டு மோசடி திட்டங்களை இடதுசாரி அரசு அரங்கேற்றி உள்ளது. ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !