உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுவர்ண பாரதி மஹோத்ஸவம்; பக்தர்கள் ஒன்றரை லட்சம் பேர் நமசிவாய பாராயணம்

சுவர்ண பாரதி மஹோத்ஸவம்; பக்தர்கள் ஒன்றரை லட்சம் பேர் நமசிவாய பாராயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக 'நம சிவாய' பாராயண சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:மனித குலத்தின் மிகப் பழமையான மற்றும் தொடர்ச்சியான வாய்மொழி மரபுகளில் ஒன்றான வேத நாம ஜபம், நமது மூதாதையரின் ஆழ்ந்த ஆன்மிக ஞானத்துடன் வாழும் இணைப்பாக செயல்படுகிறது.இந்த புனித மந்திரங்களின் துல்லியமான தாளங்கள், உச்சரிப்புகள் மற்றும் அதிர்வுகள் மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் சக்திவாய்ந்த அதிர்வுகளை உருவாக்குகின்றன.வேதங்களின் முறையான கட்டமைப்பு மற்றும் சிக்கலான பாராயண விதிகள், பண்டைய அறிஞர்களின் அறிவியல் நுட்பத்தை பிரதிபலிக்கின்றன. எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம், ஒவ்வொரு அசைவையும் கணித ஒத்திசைவில் உன்னிப்பாக உச்சரிப்பதன் வாயிலாக, தலைமுறை தலைமுறையாக அறிவை வாய்வழியாக கடத்துவதற்கான இந்திய கலாசாரத்தின் குறிப்பிடத்தக்க திறனை நிரூபிக்கிறது.இந்திய கலாசாரத்தின் தெய்வீக சாரம் அதன் உலகளாவிய கருணையில் உள்ளது. ஹிந்து மதம், சீக்கியம், சமணம் மற்றும் பவுத்தம் போன்ற முக்கிய மதங்களின் பிறப்பிடமாக நம் நாடு உள்ளது. கடந்த காலங்களில் நமது கலாசாரத்தைச் சீரழிக்கவும், கறைபடுத்தவும், களங்கப்படுத்தவும், அழிக்கவும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால், நம் கலாசாரத்தை அழிக்க முடியாததால் நாடு பிழைத்துள்ளது. தர்மம் என்பது நம் கலாசாரத்தின் மிக அடிப் படையான கருத்தாகும். தர்மத்தால் ஆளப்படும் சமுதாயத்தில், ஏற்றத்தாழ்வு களுக்கு இடமில்லை.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, நமசிவாய என முழங்கி, சுவாமி அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
அக் 27, 2024 21:18

வெளி மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ளது .ஆனால் இங்கு இதுபோல் பாராயணம் செய்யவேண்டும் என்றால் , மற்றவர்கள் நீதிமன்றத்தில் இதுபோன்ற நிகழ்வு நடக்கப்போகிறது என்று அதற்க்கு தடை வாங்கி அவர்களை தடுக்கவும் , கைது செய்யவும் ஆணையுடன் வாசலில் நிற்பார்கள், இதுதான் இன்றைய நிலைப்பாடு.அப்படியிருக்க, இனி ஆன்மிகம் என்றால் மற்ற மாநிலங்களுக்கு சென்று இறைவனின் அருளைப்பெற வேண்டிய ஒரு நிலை எல்லா குறுநில மன்னர்கள் ஆட்சியிலும் ஏற்பட்டுவிட்டது.


sridhar
அக் 27, 2024 18:49

தேர்தல் நெருக்கத்தில் தமிழகம் முழுதும் ஹிந்து ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த நம் மத தலைவர்கள் முன்வர வேண்டும். இது ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவரும். இறக்குமதி மதங்களின் அரசியல் பேயாட்டம் முடிந்துவிடும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 27, 2024 18:25

மாற்றுமத சகோதரர்களுக்கு மதமாற்றம் செய்வது ரொம்ப குஷ்டம் சாரி கஷ்டம் போலிருக்கே ...


Ramesh Sargam
அக் 27, 2024 12:17

நேற்று இளைய ஸ்வாமிகள் பெங்களூரில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இரண்டு லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் கூட்டம். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த இடம், Palace Ground அங்கு பெய்த கனமழையால் தண்ணீர் சமுத்திரமாக காட்சி அளித்தது. ஆனால் நேற்று அவை எல்லாம் வற்றி, மக்கள் சமுத்திரமாக காட்சியளித்தது. அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம். அதிகம் மக்கள் கூட்டம் என்று Bharath Book of Records என்கிற புத்தகத்தில் இடமும் பெற்றது. வாழ்க ஹிந்து முறை வாழ்க்கை. ஹிந்து என்பது மதம் அல்ல. அது எல்லா மதத்தினரையும் நல்லமார்கத்தில் அழைத்து செல்லும் ஒரு வாழ்க்கை முறை. சங்கரம் போற்றி. சங்கராச்சார்யம் போற்றி.


Rasheel
அக் 27, 2024 12:01

அனைவருக்கும் நன்மையை வேண்டுவது சனாதனம் மரங்கள், விலங்குகள், பறவைகள், நுண் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் பிறப்பிற்கும் காரணம் உள்ளன. அவை அனைத்தும் நல் வாழ்வை சனாதனம் பிரார்த்தனை செய்கிறது.


Kasimani Baskaran
அக் 27, 2024 07:36

கலியுக ஆரம்பம் ~5100 வருடங்களுக்கு முன்னர் வரை அணைத்து வேதங்களும், விஞ்ஞானமும் கூட வாய் மொழியாகவே கற்பிக்கப் பட்டது . அதன் பின்னர்தான் ஆவணப்படுத்த ஆரபித்தார்கள். நான்கு வர்ணங்களும் சமூக ஒற்றுமையை வைத்து உருவாக்கப்பட்டவை. பாலியில் இன்னும் கூட நான்கு வர்ணங்கள் உண்டு.


புதிய வீடியோ