உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரங்கள் நடுவதற்கு இடமில்லை

மரங்கள் நடுவதற்கு இடமில்லை

பெங்களூரு; 'மெட்ரோ பணியின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதிதாக மரங்கள் நடுவதற்கு இடமில்லை' என மெட்ரோ தரப்பில் கூறப்பட்டு உள்ளது.பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள், பெங்களூரில் நடந்தன. அப்போது நகரின் உள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன.'மரங்கள் அழிக்கப்படுவதால் மழை பொழிவு குறையும்; காற்று மாசுபடுவது அதிகரிக்கும்' என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பொறுப்பேற்று, மெட்ரோ நிறுவனம் சார்பில் மரங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து பெங்களூரு மெட்ரோ சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், '2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில், 61,010 மரங்கள் நட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது வரை 23,280 மரங்கள் மட்டுமே நடப்பட்டு உள்ளன. இதற்கு நகரில் போதிய இடம் இல்லாததே காரணம்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில், மரம் நடும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்து உள்ளது.மொத்தம் 61,000 மரங்கள் நடுவதாக அறிவித்துவிட்டு, 23,000 மரங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி