உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் அமைதி நிலவுகிறது; இயல்பு நிலை இல்லை; சொல்கிறார் ராணுவ தலைமை தளபதி

எல்லையில் அமைதி நிலவுகிறது; இயல்பு நிலை இல்லை; சொல்கிறார் ராணுவ தலைமை தளபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''சீன எல்லையில் சூழ்நிலை அமைதியாக உள்ளது. ஆனால், இயல்பானதாக இல்லை'', என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.கடந்த 2020ம் ஆண்டு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், டில்லியில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி பேசியதாவது: தூதரக ரீதியில் நேர்மறையான சிக்னல் வருகிறது. ஆனால், அதனை செயல்படுத்துவது என்பது இரு நாட்டு ராணுவ வீரர்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது.எல்லையில், சூழ்நிலை அமைதியாக உள்ளது. ஆனால் இயல்பானதாக இல்லை. சென்சிட்டிவ் ஆக இருக்கிறது. அங்கு 2020க்கு முன்பு இருந்த நிலை மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறோம். இது வரை, அந்த சூழல் வரவில்லை. அங்கு எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajan
அக் 01, 2024 18:56

அப்ப வீரர்கள் எதற்கு, ரஃபேல் எதற்கு? தன் நண்பர்களுடன் கோடிஸ்வரன் ஆவதற்கா? அய்யோ மக்கள் பணத்தை வீணடிக்கிறார்களே. நாங்கள் வந்தால் எல்லாமே மாறிவிடும் - பப்பு ஆவசேம். ஜால்ரா கோஷ்டிகள் ஆரவாரம்


Ra ja
அக் 01, 2024 22:23

நீங்க சொன்ன அதே பப்பு சொன்னது உண்மைதானே நாட்டுக்காக பேசுங்கள் அரசியலுக்கு பேசாதீர்கள்.


அரசு
அக் 01, 2024 15:53

வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்வதற்கும், இவர் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனவே. இதில் எது உண்மை.


karthik
அக் 01, 2024 16:39

அவர் என்ன சொன்னார்? படைகளை விளக்கிக்கொள்வதில் மட்டுமே 75 சதவீதம் பிரச்சனை தெரிந்துள்ளது என்று சொன்னார். மட்டுமே என்றால் படைகளை விளக்கி இருக்கிறது சீனா.. ஆனால் எல்லை விஷயத்தில் முடிவுக்கு வரவில்லை என்று அர்த்தம். இவர் சொல்வதும் அதே தான்.


புதிய வீடியோ