உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இரவு முழு சூரிய கிரகணம்!

இன்று இரவு முழு சூரிய கிரகணம்!

-நமது நிருபர்-

இந்நாண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று (ஆகஸ்ட் 12) இரவு வருகிறது; இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது. சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, குறுக்கே வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் அதன் நிழல் பூமியில் விழுகிறது. இதுதான் சூரிய கிரகணம். இந்தமுறை முழு சூரிய கிரகணம் 2 நிமிடம் நீடிக்கும். இந்த ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் இன்று ஆக. 12ல் நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.கிரீன்லாந்து, வடக்கு ரஷ்யா, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின், போர்ச்சுகல் சில பகுதி, அமெரிக்காவின் சில பகுதிகளில் இது தெரியும். இந்திய நேரப்படி இரவு 11:16 மணிக்கு முழு சூரிய கிரகணம் தெரியும். இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது. இருப்பினும், நாசாவின் சமூகவலைதள நேரலை மூலம் காண முடியும்.

27 ஆண்டுகளுக்கு

ஐரோப்பா 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் முழு சூரிய கிரகணத்தைக் காணவிருக்கிறது. மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய கண்டப் பகுதிகளில் இருந்து கடைசியாக 1999-ல் முழு கிரகணம் காணப்பட்டது. அதன் பிறகு, எந்தவொரு முழு கிரகணப் பாதையும் மத்திய அல்லது மேற்கு ஐரோப்பிய கண்டத்தைக் கடந்து செல்லவில்லை.அமெரிக்காவில் முழுமையான கிரகணம் ஏற்படாது. இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் நிகழும். அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் 26 மாகாணங்களில் கிரகணத்தின் ஒரு பகுதியையாவது காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.பகுதி சூரிய கிரகணத்தைக் காண்பவர்கள் அனைவரும் சான்றளிக்கப்பட்ட கிரகணக் கண்ணாடிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்; முறையான பாதுகாப்பு இல்லாமல் சூரியனை நேரடியாகப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கிரகணத்தைக் காணுமாறு நாசா அமெரிக்கர்களை வலியுறுத்தி உள்ளது.

அடுத்து…

அடுத்த ஆண்டும், 2027 ஆகஸ்ட் மாதத்தில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அந்த கிரகணத்தையும் இந்தியாவில் இருந்து காண முடியாது. வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே பார்கக முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Naga Subramanian
ஆக 12, 2026 13:33

தமிழகத்தை பிடித்திருந்த "சூரிய கிரஹணம்" அகன்று 3 மாதங்கள் ஆகிவிட்டது. அது நல்லதுதானே மக்களுக்கு


raj
ஆக 12, 2026 10:45

இந்தியாவில் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்


Barakat Ali
ஆக 12, 2026 10:40

கிரகணம் நல்லா புடிச்சிருச்சு .... நல்லா பார்க்க முடியுது .... சட்டசபை நேரலையை சொல்றேன் ....


kulanthai kannan
ஆக 12, 2026 11:00

ஹாஹா..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை