உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெரு நாய்களை பிடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: காங்., ராகுல் கடும் எதிர்ப்பு

தெரு நாய்களை பிடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: காங்., ராகுல் கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.'டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ej77ajhz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டில்லியில் சுற்றும் தெருநாய்களை பிடிப்பதற்கான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, பல்லாண்டுகளாக இருந்து வரும் மனிதாபிமான அடிப்படையிலான, அறிவியல் பின்னணி கொண்ட கொள்கைகளில் இருந்து பின்னோக்கி செல்வதாகும்.குரலற்ற இந்த ஜீவன்கள், அழிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் அல்ல. மொத்தமாக பிடித்துச் செல்வது, கொடூரமானது, குறுகிய பார்வை கொண்டது; இரக்கமற்றது.பொது பாதுகாப்பும், விலங்குகளின் நலனையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

நரேந்திர பாரதி
ஆக 19, 2025 18:35

ஒருவேளை தீயமூக காரனுங்க இந்த ஆளு ஞாபகத்துக்கு வந்துட்டாங்களோ? ஒரேயடியா மிரட்டுறாரு


joe
ஆக 18, 2025 18:40

ஆறறிவு உள்ள மனிதனை ஐந்தறிவு உள்ள விலங்குகளுக்கு சமமாக பேசக்கூடாது .மனிதர்கள் அந்த அளவுக்கு புத்திசாலிகளாக உருவாக இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்போல .மானங்கெட்ட மனிதா .விலங்குகளை வனத்துக்கு விரட்டுங்கள் .


என்றும் இந்தியன்
ஆக 17, 2025 21:10

இது ராகுலுக்கு இயற்கை தானே தன்னுடைய ஜாதியை பிடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் யாருக்குத்தான் பிடிக்கும் ஆகவே எதிர்ப்பு தெரிவிப்பது இயற்கையே


V.Muthukumar V.Muthukumar
ஆக 16, 2025 21:45

நாய்கள் மீது ராகுல் மற்றும் கருணை காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் இந்தியாவில் ஏதோ ஒரு தெருவில் இரவு 11மணிமுதல்4 மணி வரை நடமாடி பார்க்கவும்.


சிட்டுக்குருவி
ஆக 15, 2025 18:41

பஸ்ஸில் பள்ளிக்கு செல்லும் நாய்களை இங்கும் பார்க்கவும் s://youtu.be/zN2YnElLQv0?feature=shared


chandrasekaran p.m.
ஆக 13, 2025 20:46

ராகுல் காந்தி எப்போதுமே உ.பி.ஸ்க்கு ஆதரவு.


Nalla Paiyan
ஆக 13, 2025 07:12

தெருவில் தெரியும் அந்த நாய்களை பப்பு வீட்டில் விட்டு விடுங்கள் வளர்க்கட்டும்....


Sivagiri
ஆக 12, 2025 22:45

ரதன் டாடா தனது பங்களாவையே தெருநாய்களுக்காக கொடுத்து , தெருநாய்களை குளிப்பாட்டி சோறு போட்டு மருத்துவமும் கொடுத்து காப்பாற்றினாராம் , கோஷம் போடுவதை காட்டிலும் , கொஞ்சம் செய்து காண்பிப்பது மேல் . . .


Easwar SR
ஆக 12, 2025 21:45

ஊருக்கு ஒரு நல்லதுன்னா, இவருக்கு பிடிக்காதா,?


sridhar
ஆக 12, 2025 21:35

ரொம்ப பயந்துட்டாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை