உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோல்வியை அறிந்து விட்டனர்!

தோல்வியை அறிந்து விட்டனர்!

பீஹாரில் எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் தோல்வி அடையப்போவதை உணர்ந்துவிட்டனர். பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட அவர்கள், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் வாகனம் மீது நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர், பா.ஜ.,

திட்டமிட்ட பிரசாரம்!

தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவத்தை, நான் வீட்டிலிருந்து வெளியே வந்து ஓட்டுச்சாவடி நிலை அதிகாரியிடம் பெற்றதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இது, எங்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் பிரசாரம். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

ரொட்டியை திருப்புங்கள்!

ரொட்டியை கல்லில் போட்டபின் திருப்பிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் கருகி விடும். அதே போல, பீஹாரில் ஆட்சியை மாற்ற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை இங்கு, 20 ஆண்டுகள் ஆளவிட்டதே அதிகம். புதிய பீஹாரை உருவாக்க தேஜஸ்வி அரசு தேவை. லாலு பிரசாத் யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கரீம் பாய், ஆம்பூர்
நவ 07, 2025 11:37

வாயில்லா ஜீவன் கால்நடை தீவனம் ஊழல் செய்து உலக மகா சாதனை படைத்த உடல் நிலையை பொய் காரணம் காட்டி பெயிலில் உள்ள கொள்ளையன் பேசுகிறார். உள்ளே தள்ளி நான்கு கவனித்து திருப்பி போட்டால் இவ்வாறு அறிக்கை விட மாட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை