உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த வெற்றி பலருக்கு ஊக்கம் அளிக்கும்: இந்திய பாரா தடகள அணி சாதனைக்கு மோடி பாராட்டு

இந்த வெற்றி பலருக்கு ஊக்கம் அளிக்கும்: இந்திய பாரா தடகள அணி சாதனைக்கு மோடி பாராட்டு

புதுடில்லி: உலக பாரா தடகளப் போட்டிகளில், இந்திய அணியின் சாதனையை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அவர், “இந்த வெற்றி பலருக்கு ஊக்கம் அளிக்கும்' என தெரிவித்து உள்ளார்.டில்லியில், மாற்றுத் திறனாளி களுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இம்முறை இந்தியாவுக்கு 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது. உலக பாரா தடகள வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் சாதனையை பாராட்டி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்த ஆண்டு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் சிறப்பானவை. இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது. 6 தங்கப் பதக்கங்கள் உட்பட 22 பதக்கங்களை வென்றது. நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் வெற்றி பலருக்கு ஊக்கமளிக்கும். நமது அணியின் ஒவ்வொரு உறுப்பினரைப் பற்றியும் நான் பெருமைப்படுகிறேன். மேலும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். டில்லியில் போட்டியை நடத்தியது இந்தியாவிற்கு ஒரு கவுரமாகும். போட்டியில் பங்கேற்ற கிட்டத்தட்ட 100 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ