உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

டில்லி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, நிருபர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7wp93aci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லி சம்பவத்திற்கு காரணமானவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்பிக்க விடமாட்டோம். டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்று நான் தேசத்திற்கு உறுதி அளிக்கிறேன். இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதில் தொடர்புடையவர்களை நாங்கள் தப்பிக்க விடமாட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக உண்மை மக்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். விசாரணையின் முடிவுகள் விரைவில் பொதுவெளியில் வெளியிடப்படும். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் அளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

என்னத்த சொல்ல
நவ 11, 2025 15:56

டெல்லி மற்ற நகரங்களை போல் இல்லாமல், உச்ச பட்ச பாதுகாப்பு உள்ள நகர். அங்கு இப்படி ஒரு சம்பவம்.. .


SRIRAMA ANU
நவ 11, 2025 15:28

எங்கு கவனக்குறைவு? ...


Perumal Pillai
நவ 11, 2025 14:00

நம்ம நாட்டு கோர்ட்கள் பாதிக்க பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுமா ?


Rathna
நவ 11, 2025 14:00

இங்கே எழுதுபவனின் பல பேரின் கொண்டை அவன் யார், எது வரை செல்வான் என்பதை காண்பித்து கொடுத்து விட்டது. இதை தேச பக்தி உள்ள மக்கள் புரிந்து கொண்டாலே நமக்கு பாதுகாப்பு தான்.


Rajah
நவ 11, 2025 13:25

சிலரின் கருத்துக்கள் அவர்களின் தாய்நாடு பாகிஸ்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது.


திகழ்ஓவியன்
நவ 11, 2025 14:12

இந்த பேச்சு 41 பேர் இருந்த பொது இருந்து இருக்கனும் என்ன என்ன பேசுநி ர்கள்


SUBBU,MADURAI
நவ 11, 2025 12:51

Cabinet Committee on Security CCS meeting likely tomorrow at 5:30 PM.


திகழ்ஓவியன்
நவ 11, 2025 13:21

எதுக்கு வெட்கமா இல்லை TOP செக்யூரிட்டி உள்ள இடம், கெஜ்ரிவாலை குறை சொல்லி இப்ப DOUBLE என்ஜின் UNINTRUPTED உதவி சர்க்கார் இவ்வளவு இருந்தும் , இதே ஒரு மாநிலத்தில் நடந்தால் என்ன என்ன கேட்பீர்கள்


Rajah
நவ 11, 2025 14:13

CCS மீட்டிங் எல்லாம் எதற்கு? பத்திரிகைகளில் நாட்டிற்கு எதிராக பதிவிடும் சிலரைப் பிடித்து நல்ல முறையில் விசாரித்தாலே பல பயங்கரவாதிகள் பிடிபடுவார்கள். இதை உளவுத் துறையினர் உடனடியாகச் செய்ய வேண்டும்.


Sangi Mangi
நவ 11, 2025 12:49

அரசியல்னா என்ன? எளிமையாக சொல்கிறேன் 1. தமிழ்நாட்டில் கார் சிலிண்டர் வெடித்தால் அதை கார் குண்டு என்றும், டெல்லியில் காரில் வெடிபொருட்கள் வெடித்தால் அதை கார் வெடித்தது என்றும் சொல்ல வேண்டும்… இன்னும் எளிமையாக சொல்லட்டுமா…. திமுக வின் மீது நிரூபிக்கவே முடியாத வெற்றுக் குற்றச்சாட்டுகளாக இருந்தால் கூட அதை ஊழல் என்றும், ஜெயலலிதா தண்டனையே பெற்றாலும் அதை சொத்து வழக்கு என்றும் சொல்ல வேண்டும்.. தீவிரவாதிகள் ஊடுருவி ராணுவத்தினரையே புல்வாமாவில் கொன்றாலும் அதை ஒன்றிய அரசின் தோல்வி என்று சொல்லக் கூடாது.. கரூரில் விஜயைப் பார்க்க வந்த கூட்டம் மூச்சுத் திணறி இறந்தால் அதற்கு முழு பொறுப்பும் திமுக அரசுதான் என்று சொல்ல வேண்டும்…


Rajah
நவ 11, 2025 13:15

நல்ல பெயர்.


NALAM VIRUMBI
நவ 11, 2025 12:46

மறைந்த முன்னாள் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் சொன்னபடி நமது தேசத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு காவடி தூக்கும் அரசியல் தலைவர்களை ஒழிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். மத்திய அரசு செய்யுமா??


திகழ்ஓவியன்
நவ 11, 2025 12:46

உண்மையை கண்டறிய ஹேமமாலினி தலைமையில் பிஜேபி MP கிளம்பி இருப்பாங்களே


திகழ்ஓவியன்
நவ 11, 2025 12:36

2020 பீகார் தேர்தல்: இந்தியா மற்றும் சீனா கல்வான் பள்ளத்தாக்கு போர், தேர்தலுக்கு அப்புறம் நார்மல் ஆகிடிச்சு. பீகார் தேர்தல் 2025 டெல்லி குண்டுவெடிப்பு. எதோ இடிக்கிகுதே?


SUBBU,MADURAI
நவ 11, 2025 12:54

முதலில் உன்னைப் போன்ற தேச விரோதிளை சுளுக்கெடுக்க வேண்டும்.


raja
நவ 11, 2025 13:07

பிடிபடும் பெயர்களை பார்த்துமா உனக்கு இடிக்குது...


திகழ்ஓவியன்
நவ 11, 2025 13:24

நேற்று RSS தலை BAGAVATH பேச்சு இன்று இப்படி ஏதோ இடிக்கிளை ,டிசைன் அப்படி தான் இருக்கு ,