சிறுவனை சுட்ட மூவருக்கு வலை
புதுடில்லி:ஆசாத்பூரில், 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட, மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர்.வடமேற்கு டில்லியின் ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்தவர் ஆர்யன், 17. ஆசாத்பூர் மேம்பாலம் அருகே நேற்று முன் தினம் இரவு நின்றிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர், ஆர்யன் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர்.ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆர்யன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆர்யனின் தாய் நீத்து, ''மகன் மற்றும் உறவினர்களுடன் ஆசாத்பூர் மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தோம். அதே பகுதியைச் சேர்ந்த லட்டு, ஷம்ஷேர் மற்றும் ஷானு ஆகிய மூவரும் ஆர்யனை துப்பாக்கியால் சுட்டனர்,'' என்றார்.இதுகுறித்து, ஆதர்ஷ் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடுகின்றனர்.