உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலையில் விழுந்த மின் கம்பி; பைக்கில் சென்ற மூவர் பலி

சாலையில் விழுந்த மின் கம்பி; பைக்கில் சென்ற மூவர் பலி

ஜெய்ப்பூர்; ராஜஸ்தானில் நாகவுர் மாவட்டத்தின் கட்லு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பீதாராம், கலுராம், ஜித்தாராம். இவர்கள் மூன்று பேரும், ஒரே பைக்கில் அருகே உள்ள முண்டியா என்ற பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். கின்வசார் என்ற இடத்தில், சாலையில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் அவர்கள் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து, பைக் தீப்பற்றி எரிந்தது. இதில் மூன்று பேரும் தீயில் சிக்கி அலறினர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க போராடினர். எனினும், தீயில் கருகி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதேபோல் அவர்கள் சென்ற பைக்கும், தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மின் துறை அதிகாரிகளின் உதவியுடன் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி