உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூன்று அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூன்று அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்

ஜம்மு: லஷ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மூன்று அரசு ஊழியர்களை ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் பதவி நீக்கம் செய்தார். ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த போலீஸ்காரர் மாலிக் இஸ்பாக் நசீர், அரசு பள்ளி ஆசிரியர் அஜாஸ் அஹ்மது, ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி உதவியாளர் வாசிம் அஹ்மது கான். இவர்கள் மூவருக்கும் லஷ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் கடத்தியதாக மாலிக் கைது செய்யப்பட்டார். ஆசிரியரான அஜாஸ் அஹ்மது ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புக்கு ஆயுதங்கள் கடத்தியதாக 2023ல் கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில் இளநிலை உதவியாளராக இருந்த வாசிம், பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரியை கொலை செய்ய அந்த இரு பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூன்று பேரையும் டிஸ்மிஸ் செய்து காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 04, 2025 09:10

அதோடு அவர்களின் குடும்பத்தினர் எந்த கோட்டாவிற்கும் இனி வாய்ப்பில்லாதபடி சட்டம் இயற்ற வேண்டும்


புதிய வீடியோ