உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட்டில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூன்று நீதிபதிகள் பணியிடங்கள் காலியாகின. இந்த பணியிடங்களுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அதுல்.எஸ்.சந்துர்கர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, மூன்று நீதிபதிகளும் நேற்று பதவியேற்றனர். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அவர்கள் மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை, தன் முழு பலமான 34ஐ எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

jss
மே 31, 2025 07:41

3 நீதிபதிகள் என்ன 30 நீதிபதிகளை நியமுத்தாலும் சாதாரண குடிமகனுக்கும் பாமரனுக்கும் நீதி எட்டாக்கனிதான்.


Palanisamy Sekar
மே 31, 2025 02:28

அனுமதிகொடுத்த மாண்புமிகு குடியரசு தலைவருக்கே இந்த நீதிபதிகள் கெடுதிக்கும் போக்கினை தொடராமல் பார்த்துக்கொண்டு இந்திய அரசியல் அமைப்பினை கட்டிக்காக்க வேண்டும். பதினான்கு கேள்விகள் கேட்டிருந்த குடியரசு தலைவரின் கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மௌனம் காப்பது சரிதானா என்பதை புதிதாக நியமிக்கப்பட்ட இந்த மூன்று நீதிபதிகள் கவனத்தில் கொள்வார்களா என்பதுதான் சாமானியர்களின் எதிர்பார்ப்பு. அப்படி பதில் சொல்லாமல் மௌனம் காக்கும் அந்த நீதிபதிகளை பொறுப்பிலிருந்து நீக்கிட பாராளுமன்றத்தை கூட்டி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். அதுதான் குடியரசு தலைவருக்கு ஆட்சியாளர்கள் கொடுக்கும் மரியாதையை மற்றும் மாண்பும் ஆகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை