உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி; காஷ்மீர் விபத்தில் சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழப்பு

ம.பி.,யில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி; காஷ்மீர் விபத்தில் சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து நாக்பூருக்கு பஸ் ஒன்று சென்ற கொண்டு இருந்தனர். பஸ் பார்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமன்பூர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பஸ் டிரைவர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த மால்மா (45), நாக்பூரைச் சேர்ந்த சுபம் மேஷ்ராம் (28) மற்றும் அமோல் கோடே (42) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காஷ்மீரில் விபத்து

அதேபோல், ஜம்மு காஷ்மீரில், காண்டர்பால் மாவட்டத்தின் குண்ட் கங்கன் பகுதிக்கு அருகே, கார், பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுற்றுலாப் பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை