மேலும் செய்திகள்
பெயின்டரை கொன்ற சகோதரர்கள் சரண்
01-Jan-2025
ராய்ப்பூர்,:சத்தீஸ்கரில் செய்தியாளரின் தந்தை, தாய், சகோதரர் ஆகிய மூவரை மர்ம நபர்கள் கோடரி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் டோப்போ. தனியார் செய்தி சேனலின் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை மஹே டோப்போ, 57, தாய் பசந்தி டோப்போ, 55. சந்தோஷ் குமாருக்கு நரேஷ் டோப்போ, 30, உமேஸ் டோப்போ ஆகிய இரு சகோதரர்கள். நேற்று முன்தினம் ஜெகந்நாத்பூரில் உள்ள இவர்களது விவசாய நிலத்துக்கு, சந்தோஷ் குமாரின் பெற்றோர், மகன் நரேஷ் டோப்பாவுடன் சென்றனர். அப்போது அங்கு கோடரி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஆறு பேர் சந்தோஷ் குமார் குடும்பத்தினருடன் நிலப்பிரச்னை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக மாறியது. அப்போது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கோடரி, அரிவாள் உள்ளிட்டவற்றால் சந்தோஷ் குமாரின் பெற்றோர் மற்றும் சகோதரர் நரேஷ் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தாய் பசந்தி, சகோதரர் நரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தந்தை மஹே டோப்போ, அம்பிகாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவத்தின் போது சந்தோஷ் குமாரும், மற்றொரு சகோதரர் உமேசும் அங்கு இல்லாததால் இருவரும் உயிர் தப்பினர். கொலை செய்து தப்பிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
01-Jan-2025